சில கள ஆய்வுக் குறிப்புகள்
இலங்கையில் 1979க்குப் பிறகு அறிமுகமான திறந்த போருளாதாரக் கொள் கையின் விளைவாக கொழும்பின் நகர வாழ்க்கை வேகமாக மாறி வருகின் றது. அதீத நகரமயமாக்கப்பட்ட சமூக அமைப்பில் போதைவஸ்துப் பாவனை பெரியளவிலான நெருக்கடிகளை உருவாக்குகின்றது. இலங்கையின் மொத்த சிறைக்கைதிகளில் 40%க்கும் அதிகமானோர் போதைவஸ்துக்களுடன் தொடர் பானவர்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் பொதுவாக இலங்கையிலும் குறிப்பாக கொழும்பிலும் போதைவஸ்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 15 வகையான பிரபல்யமான போதைவஸ்துக்கள் பாவனையில் உள்ளபோதும் இலங்கையில் குறிப்பாக கொழும்பு இளைஞர்களிடையே ஹெரோயின் முதலிடத்தில் உள்ளது.ஹெரோயின் போதைவஸ்திலும் பல்வேறு தரங்கள் உள்ளன. மூன்றாம் தர ஹெரோயினே கொழும்பு இளைஞர்களால் பெரிதும் பாவிக்கப்படுகின்றது. பொலிஸ் போதை தடுப்புப் பணியகம் (Police Narcotic Bureau) வின் முன்னாள் பணிப்பாளர் பூஜித ஜயசுந்தர கொழும்பு இளைஞர்களுக்கு போதைப்பொருள் எங்கிருந்து வருகின்றது என்ற கேள்விக்கு பின்வருமாறு பதில் தந்தார்.
ஆசியாவில் தங்கப் பிறை (Golden Crescent) நாடுகள் என வழங்கப்படும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், லெபனான் என்பவற்றில் உற்பத்தி செய்யப் படும் ஹெரோயின் இந்தியா வழியாக கொழும்பு வருகின்றது. தங்க முக் கோணம் (Golden Triangle) எனப்படும் மியன்மார், லாவோஸ், தாய்லாந்து என்பவற்றிலிருந்தும் ஹெரோயின் கொழும்புக்குக் கடத்தப்படுகின்றது.
2000ம் ஆண்டில் மாத்திரம் 10,278 பேரை பொலிஸ் போதைவஸ்துத் தடுப்புப் பிரிவு கைதுசெய்தது. இதற்கு 10,117 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டவர்களில் கணிசமானோர் முஸ்லிம் இளைஞர்கள். பாதாள உலகக் கும்பல்களைச் சேர்ந்தவர்களே வருமான நோக்கத்திற்காக போதைப் பொருள் கடத்தலிலும் வணிகத்திலும் பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய அபாயகரமான போதைவஸ்து கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board) தகவலின்படி இலங்கையில் மொத்தமாக40,000 ஹெரோயின் பாவனையாளர்கள் உள்ளனர். அவற்றுள் 20,000 பேர் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உள்ளனர். கொழும்பு மத்தியில் செயற்படும் பாதள உலக கோஷ்டியினரே கொழும்பு நகர போதைவஸ்து வணிகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றனர். இதற்கென்று மிகத் தந்திரமான வழிகள் கையாளப்படு கின்றன.
போதைவஸ்துக்களைக் கடத்தும் இன்னொரு முக்கிய வழி மனித உடலில் தோலின் கீழ்ப்பகுதியில் அறுவை செய்துவிட்டு அந்த இடத்தில் போதை வஸ்தை வைத்து மீண்டும் தைத்துக் கொள்வது. அல்லது காயங்களுக்கு மருந்து கட்டுவதுபோன்று கட்டிக் கொள்வது.
உலகப் பெயர் பெற்ற மாபியாக்களால் கையாளப்படும் இவ்வழி முறை கொழும்பிலும் பாதாள உலகத்தினரால் கையாளப்படுகின்றது. கை, கால் போன்ற உறுப்புகளில் உள்ள தசை நிரம்பிய பகுதிகளில் அல்லது மாத்திரை வடிவில் உட்கொண்டு போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. Cavities in Human Bodies என்று இதற்குப் பெயர்.
இலங்கை போதைப் பொருள் குற்றத்தடுப்புப் பிரிவில் பொலிஸாரின் சோத னைக்கு உட்பட்ட குற்றவாளிகளில் பலர் இத்தகைய முறை யில் போதை வஸ்துக்களை கடத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
போதைவஸ்தை கடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மூன்றாவது வழிமுறை Pellets வடிவில் தொண்டைக்குள் இறக்கி, குடல் வழியாக பெருங் குடலில் சேமித்தல். இதற்கு அப்பால் குறிப்பிட்ட சோதனைச் சாவடியை தாண்டு வதற்கு அருகிலுள்ள அடுத்த பயணிகளின் பொதிகளில் அவர்களுக்குத் தெரி யாமலேயே போதைவஸ்தை திணித்தல். பின்பு அவர்களுக்குத் தெரியாம லேயே அதை மீட்டெடுத்தல் என்ற வகையிலும் போதைப் பொருளை கடத்து கின்றனர்.
வெலிக்கடையிலுள்ள சில முஸ்லிம் இளைஞர்களை நேர்கண்டபோது அவர் களில் கணிசமானோர் தமது பொதிகளில் தமக்குத் தெரியாமல் போதை வஸ்து திணிக்கப்பட்டதால் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள் என்று தெரிவித்தனர்.
முஸ்லிம் இளைஞர்களால் பயன்படுத்தப்படும் மற்றொரு வகை போதைப் பொருள் Canabis Sativa எனப்படும் கஞ்சாவாகும். இது இலங்கையின் சில பாகங் களில் கள்ளத்தனமாக உற்பத்தி செய்யப்பட்டு தலைநகருக்குக் கடத்தப்படு கின்றன. பொலிஸ் குற்றப் பிரிவின் தகவல்களின் படி இலங்கையில் 200,000 கஞ்சாக் குடிகாரர்கள் உள்ளனர். கொழும்பில் சுமார் 50,000 மேற்பட்டோர் இப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
சமீபகாலமாக கொழும்பு முஸ்லிம் இளைஞர்களைப் பாதித்து வரும் மற்றொரு வகைப் போதைப் பொருள் மாவா என அறியப்படுகிறது. சாதாரண மாக பாடசாலைகளில் சாதாரண தரத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் முதல், பெரும் அளவிலான இளைஞர்கள் வரை அனைவரையும் மாவா பாவனை பீடித்துள்ளது. இது போதைப் பொருள் அடங்கிய அல்லது போதை ஊட்டப்பட்ட ஒரு வகை பீடா என்று அறியப்படுகிறது.
கணிசமான முஸ்லிம் இளைஞர்கள் பீடா, அதன் ஆபத்தான வகைகளில் ஒன்றான மாவாவிற்கு அடிமையாகி வருகின்றனர். சமவயதுக் குழுக்களிடமி ருந்தே இப்பழக்கம் பரவி வருகின்றது. மாவா உடல் ரீதியிலும் உயிரியல் ரீதியிலும் எதிர்மறையான தாக்கங்களை இளைஞர்களிடையே ஏற்படுத்தி வருகின்றது. சில இளைஞர்கள் இதற்கு அடிமையாகியதால் மகப்பேற்றுத் தன்மையை இழந்துள் ளமை எமது ஆய்வில் கண்டறியப்பட்டது.
சில இளைஞர்களின் வாய்ப் பிரதேசத்திலும் கன்னங்களிலும் தொடர்ச்சியான பாவனையினால் துளை விழும் நிலமைகளும் தோன்றியுள்ளன. 90%க்கும் அதிகமாக இவற்றைப் பாவிக்கும் இளைஞர்கள் போதையூட்டப்பட்ட பீடா வையோ மாவாவையோ போதைவஸ்து என ஏற்றுக் கொள்வதற்கே தயா ரில்லை. சாதாரணமாக வெற்றிலை போடுதல் போன்ற ஒரு வழக்கமாக இதனைக் கொண்டுள்ளனர்.
கொழும்பு மத்திய கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவர்களில் 20% மானோருக்கும் அதிகமானோர் இப்பழக்கத்திற்கு அடிமை யாகி உள்ளனர். எதிர்காலத்தில் பெரும்பாலான மாணவர்களிடையே இப்பழக் கம் பரவும் வாய்ப்பு உள்ளது. பாடசாலை வளாகத்தினுள்ளே உள்ளகச் சுற்றுக் காகவும் பணம் பண்ணுவதற்காகவும் சில மாணவர்கள் சிலவகையான போதைவஸ்துக்களை விற்பனை செய்து வருகின்றனர்.


0 comments:
Post a Comment