Friday, June 17, 2011

தாயின் காலடியில் சொர்க்கம்

Best Blogger Tips
* இறைவன் கூறுகின்றான்: பெற்றோர் நலன் பேண வேண்டும் என்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (எனவே) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து.
* நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
சுவனம் (சொர்க்கம்) தாயின் காலடியில் இருக்கிறது. (தாய்க்கு பணிவிடை செய்பவர் சுவனம் புகுவர்) 
* இறைத்தூதரே! எனது பெற்றோர் இறந்த பின்னரும் அவர்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை ஏதும் எஞ்சியுள்ளதா என ஒரு நபித்தோழர் கேட்டார். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஆம்! அவர்களுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். அவர்களின் மரண சாசனத்தை நிறைவேற்றுங்கள். பெற்றோர்களின் உறவுகளைத் துண்டிக்காமல் வாழுங்கள். பெற்றோர்களின் நண்பர்களுக்கு கண்ணியம் அளியுங்கள். அவர்களை உபசரியுங்கள்.
( வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)

Tuesday, June 14, 2011

லண்டனில் இஸ்லாமிய சமூகப் புரட்சி: உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்

Best Blogger Tips
லண்டன் இஸ்லாமிய தவ்வா செண்டர் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யும் இஸ்லாமிய மாநாடு தற்போது லண்டன் தவ்வா செண்டரில் நடை பெற்றுகொண்டிருகின்றது அதில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இறுதி தூதரின் இனிய அழைப்பு – இஸ்லாமிய சமூக புரட்சி என்ற தலைப்பில் உரையாற்றி கொண்டிருகின்றார் என்று அங்கிருந்து அலி ரிஸான் அவர்கள் lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார்.
அங்கு உரையாற்றும் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதரின் அழைப்பு ஒரு முழுமையான சமூக புரட்சியாக இருந்தது என்றும் அல்லாஹ்வின் தூதர் ‘கூனு லாயிலாக இல்லலாஹ் துப்ளிஹூன் ‘ அல்லாஹ்வை தவிர வேறு ‘இலாஹ்’ இல்லை என்று ஏற்றுகொள்ளுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று மக்களை அழைத்தார்கள் அந்த வெற்றியின் ஒன்று மறுமையில் சுவர்க்கம் என்ற வெற்றி இரண்டாவது வெற்றி இந்த உலகில் நீங்கள் ஏற்றுகொள்ளும் இந்த கொள்கை நிலைநாட்டப்பட்டு நீங்கள் அரபிகளுக்கும் அஜமிகளுக்கும் ஆட்சியாளராக இருப்பீர்கள் என்பதாக இருந்தது என்று தெரிவித்தார் விரிவாக
இதுதான் அல்லாஹ்வின் தூதரின் அழைப்பாக இருந்தது இந்த சமூக புரட்சிக்கான அழைப்பை அன்றைய மக்கள் தெளிவாக விளங்கி கொண்டார்கள் வெறுமனே அவரின் அழைப்பு சில தனிநபர்களில் அவர்களின் வாழ்கையில் சில மாற்றங்கள் தோற்று விற்பதாக இருக்கவில்லை மாறாக ஒரு பாரிய சமூக மாற்றத்தை வேண்டியது என்று உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றும் போது அல்லாஹ்வின் தூதரின் அழைப்பில் இரண்டு பக்கங்கள் வெளிப்பட்டன ஒன்று இஸ்லாத்தை ஏற்றுகொண்டால் சுவர்க்கம் என்பதும் மற்றது பாரிய சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டமாகவும் இருந்தது ஒரு முறை மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு சித்திரவதைகளை அனுபவித்து வந்த ஹப்பாப் இப்னு அரத் என்ற சஹாபி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எமக்காக அல்லாஹ்விடம்  உதவி புரியுமாறு வேண்ட கூடாத ? என்று வினவியபோது அதற்கு பதில் தெரிவித்த அல்லாஹ்வின் தூதர் நீங்கள் அவசர படுகின்றீர்கள் உங்களுக்கு முன்பிருந்தவர்கள் நிலத்தில் கால்கள் வரை புதைக்கப்பட்டு தலையில் இருந்து கால்கள் வரை இரண்டாக பிளக்கபட்டார்கள் ஆனால் அவர்கள் இஸ்லாத்தை கைவிடவில்லை உயிரை விட்டார்கள்.
மேலும் அந்த சித்ரவதைக்கு முகம் கொடுக்கும் ஹப்பாப் இப்னு அரத் என்ற தோழரிடம் ஒரு காலம் வரும் அப்போது ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்றார்கள் இந்த சம்பவம் அன்று அல்லாஹ்வின் தூதர் எந்த பலமும் இன்றி இருந்தபோதும் தனது தோழர்கள் சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க எந்த சக்தியும் இல்லாதபோதும் கூட சன்ஆவில் – தற்போதைய யெமன் நாட்டின் தலைநகர் – இருந்து பல ஆயிரக்கணக்கான மயில்கள் துரத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் சித்திரவதை பட்டு வரும் தனது தோழருக்கு ஒரு காலம் வரும் அப்போது ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்று தெரிவித்தமை அவர் சமூக புரட்சி ஒன்றை வேண்டி நின்றார் என்பதைத்தான் காட்டுகின்றது என்று தெரிவித்தார்.
இதை அல்லாஹ்வின் தூதர் சொல்லும் போது அன்று மக்காவில் முஸ்லிம்கள் அடிக்குமேல் அடி வாங்கிகொண்டிருந்தார்கள் தம்மை பாதுகாக்க கூட அவர்களிடம் எந்த பலமும் இருக்கவில்லை கவ்பாவுக்குள் 360 விக்ரகங்கள் இருந்தன அவற்றை எதுவும் செய்யமுடியாத மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர்.
அடிபட்டு சித்திரவதைகளை பெற்றுவரும் தோழரிடம் ஆயிரக்கணக்கான மையில்களுக்கு அப்பால் உள்ள சன்ஆவை பற்றி பேசுகின்றார் அன்று அரேபிய தேசம் கொள்ளை கொலை வழிப்பறி என்று அனைத்து குற்றங்களும்  நிறைந்து காணப்பட்டது தனது தோழர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருந்த அல்லாஹ்வின் தூதர் சித்திரவதை பட்டு வந்த தனது தோழரை தனக்கு முன் உக்காரவைத்து ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்று கூறியது அவர் பாரிய சமூக புரட்சியை சமூக மாற்றத்தி வேண்டிநின்றார் என்பதைத்தான் காட்டுகின்றது என்று தெரிவித்தார்
அதேபோன்று அல்லாஹ்வின் தூதர் கோத்திர தலைவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது இரண்டு விடயங்களை முன்வைத்தார்கள் ஒன்று நீங்கள் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவேண்டும் என்பதும் இரண்டாவது நீங்கள் ஏற்றுக்கொண்ட இஸ்லாத்தை இந்த பூமியில் நிலைநாட்ட நீங்கள் எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதாகும் இந்த இவரின் அழைப்பை கோத்திர தலைவர்கள் அன்று தெளிவாக புரிந்து கொண்டனர்.
ஒரு முறை ஆமிர் இப்னு சஹ்ஸா என்ற கோத்திரத்தின் தலைவரை அழைத்து அல்லாஹ்வின் தூதர் நீங்களும் உங்கள் சமூகத்தவர்களும் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவேண்டும் என்றும் ஏற்றுக்கொண்ட இஸ்லாத்தை இந்த பூமியில் நிலைநாட்ட நீங்கள் எனக்கு முழுமையாக உதவி புரியவேண்டும் என்று கோரினார்கள் அதற்கு தனது ஏனைய கோத்திர தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பதிலளித்த அந்த கோத்திர தலைவர் ஆம் நாங்கள் ஏற்றுகொள்கின்றோம் அனால் ஒரு நிபந்தனை உங்களின் மரணத்துக்கு பின்னர் தலைமைத்துவம் எங்களின் கோத்திரத்துக்கு தரப்படவேண்டும் என்று தெரிவித்தார் இந்த சம்பவங்கள் அல்லாஹ்வின் தூதர் பாரிய சமூக மாற்றத்தை நோக்கிய அழைப்பு விடுவதை அன்றைய மக்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதை காட்டுகின்றது என்று தெரிவித்தார் என்று அலி ரிஸான் தெரிவிக்கின்றார்.
இந்த மாநாட்டில் மேலும் மௌலவி உமர் சரீப் மற்றும் மௌலவி அப்துல் காதர் மதனி ஆகியோரும் உரையாற்றவுள்ளனர் கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹாம் ப்லாஷேட் பாடசாலையில்  இந்த மாநாடு இடம்பெற்று வருகின்றது மாநாட்டில் ஏராளமான தமிழ் பேசும் இலங்கை இந்திய நாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
News:Lankamuslim

Monday, June 6, 2011

அல் குர்ஆனை அரசியல் களத்தில் தவறாக பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும்

Best Blogger Tips
இஸ்லாமிய அரசியல் என்பது அராஜகம் , பயங்கரவாதம் , இனவாதம் , துவேசம் , சிறு பான்மை ஒடுக்கு முறை போன்ற அணைத்து மனித விரோத உணர்வுகளுக்கும் நேர் எதிரானது அல் குர்ஆன் போதிக்கும் அரசியல் , பொருளாதார , சமுகவியல் , போரியல் கோட்பாடுகள் மனிதனையும் இறைவனையும் மிகவும் நெருக்கமாக தொடர்பு படுத்தி நிற்பவை அது போதிக்கும் நீதி என்றும் நிலையானது சொந்த இலாபங்களுக்காக ,தான் சார்ந்த கட்சியின் ஆட்களுக்காக , பச்சை , நீளம் , சிகப்பு  என்ற நிரங்களுக்காக அதன் நீதி சாய்ந்து விடாது , இஸ்லாமிய அரசின்  தலைவர் கலீபா குற்றம் செய்தால் அவரும் தண்டிக்கபடுவார் இஸ்லாமிய அரசியல் ஒவ்வோர் தனி மனிதனின் உரிமைகளையும் மிகவும் நுட்பமாக பாதுகாக்கும் தன்மை கொண்டது இதை தான் இஸ்லாமிய இரண்டாவது அரசியல் தலைவர் கலீபா உமர் இப்படி கூறினார் ” எனது ஆட்சியில் .. கடற்கரை .. ஒன்றில் ஒரு நாய் இறந்தாலும் அதற்கும் நான் ..பொறுப்பு  சொல்லவேண்டும் என்றார் ” இவை வெறும் வார்த்தைகள் அல்ல உலகை ஆண்ட நடைமுறை அரசியல் .    தனி நபர் சுதந்திரத்துக்காக சமூகத்தையோ , சமுகத்தின் சுதந்திரத்துக்காக தனி நபரையோ இஸ்லாமிய அரசியலில் பலி இடமுடியாது இந்த அரசியல் முற்றிலும் நடைமுறை சார்ந்தது இந்த  உண்மையான நடைமுறை பண்புகளை கொண்ட அரசியல் யாப்புதான்   அல் குர்ஆன் இதை எந்த அரசியல் கட்சி தவறாக பயன் படுத்த முற்பட்டாலும் அது மிக பெரிய  குற்றமாகத்தான் அமையும்.
உதாரணமாக கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி போகும் பஸ் நாங்கள் லண்டன்  போகின்றோம்  லண்டன்  போகும் பிரயாணிகள் பஸ்ஸில் ஏறி கொள்ளுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானதுதான் நமது நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அல் குர்ஆனை பயன்படுத்துவது இந்த புதிய முறையற்ற  பலக்கம் முற்றாக தவிர்க்க  வேண்டும்   முழு மனித சமூகத்துக்குமான விடிவு இஸ்லாம் கூறும் அரசியலில் மட்டும்தான் நடைமுறையில் இருக்கும் இஸ்லாம் கூறும் அரசியல் மனிதனை அணைத்து அடிமைத்தனத்தில் இருந்தும்  விடுதலை செய்து  பிரபஞ்சங்களின் இறைவனுக்கு மட்டும் கட்டுப்படும் மனிதனாக மாற்றும் தன்மை கொண்டது

Friday, June 3, 2011

லிபியா சொல்லும் சேதி!

Best Blogger Tips

நீங்கள் எத்தனைச் சின்னவர்கள் என்பதல்ல விசயம்! உங்கள் அபார நம்பிக்கையும் நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியை தீர்மானிக்கும்!
இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஒரு வட ஆப்பிரிக்க இளைஞனுக்கு முற்றிலும் பொருந்தும். 1960களில் அந்த வாலிபன், எகிப்தின் கமால் அப்துல் நாசரை வாசித்தான்; சீனாவின் மாவோவை படித்துப் பார்த்தான். அப்பொழுது அவனின் வயது இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் இடையில் தான்! சிறுபிள்ளை விவசாயம் வீடு வந்து சேராது என்று பெரியவர்கள் இளையவர்களை மட்டம் தட்டி வைப்பதை அந்த இளைஞனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் இராணுவ வேலைக்குப் போனான். போனவுடன் தலைமைப் பதவியா கொடுப்பார்கள்? மூன்றாம் நிலைதான். அடுத்தவர்கள் தனது தலைவிதியை நிர்ணயிப்பதை அந்த “”இளம் ரத்தம்” ஏற்றுக் கொள்ளவில்லை. தனது 27 வயதில் தானே தன் முன்னேற்றத்திற்கு அயராது உழைக்க ஆரம்பித்தான்.

Thursday, June 2, 2011

இஸ்லாத்தில் பெண்கள் நிலை: இன்றைய யதார்த்தம் என்ன?

Best Blogger Tips

மார்க்கத்தைக் கற்ற நமது இளைஞர்களில் அனேகர் திருமண விடயத்தில் மட்டும் 'உம்மாவுக்காக!' என்று 'தாய் சொல் தட்டாத தனயர்களாய்' மாறி லட்சங்களுக்குத் தன்னை விற்றுவிடத் தயங்காத பின்னடைவு அல்லது பெண்பார்க்கும் போதே நல்ல 'பசை'யுள்ள புளியங்கொம்பாகப் பார்த்துப் பிடித்துக்கொள்ளும் சாமர்த்தியம்(?!)

இன்னொருபுறம் திருமணத்தின் பின்னர் 'பிறருக்கு அழகுகாட்ட' என்று ஏற்கெனவே அவள் போட்டிருந்த ஃபர்தாவைக் கழற்றிவிட்டு வெறுமனே ஒப்புக்கு ஷால் போடுமாறு நிர்ப்பந்திக்கும் 'வீரம்?!' கூட ஆங்காங்கே வெளிப்படத்தான் செய்கிறது. இப்படி இப்படி எத்தனை! எதைச் சொல்ல? எதை விட?
தமக்கு சீதனம் சேர்க்கவும், நிர்க்கதியான நிலையிலிருக்கும் தமது குடும்பத்தைப் பராமரிக்கவும் என்று எத்தனை ஆயிரம் முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கில் பணிப்பெண்களாய் முதுகுமுறிய வேலை பார்க்கிறார்கள்?
மஹ்ரம் துணையின்றி வேலை வாய்ப்புக்காக தனியே வெளிநாடு போவது ஹராம் என்று 'ஃபத்வா' கொடுக்கும் நமது மார்க்க மேதைகள் இந்த விஷச் சக்கரத்திலிருந்து பெண்களும் நம் சமூகமும் மீள்வதற்கான தயாரிப்புகளைச் செய்துகொடுப்பது பற்றி சமூகத்தைத் தட்டியெழுப்பவோ, அந்நிய கலாசாரத்தால் சீர்கெட்டுப் போயுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பவோ என்ன தயாரிப்புகளைச் செய்துள்ளார்கள்?
இஸ்லாம் வாழும் மார்க்கம். வாழ்வு முழுமையும் வணக்கம் என்று கற்றுத் தந்துள்ள உன்னத மார்க்கம். எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு தந்துள்ள நடைமுறை மார்க்கம். அப்படியிருக்க யதார்த்தநிலை எவ்வளவு நேர்மாறாக இருக்கிறது?]]
ஒருகாலத்தில் மற்ற சமயத்தவர் மத்தியில் பெண்ணுக்கு ஆன்மா உண்டா இல்லையா என்ற பட்டிமன்றம் ஒருபுறம், பெண் என்பவள் இழிபிறப்பு என்றும் தீண்டத்தகாதவள், துரதிருஷ்டம் பிடித்தவள் என்றும் தள்ளிவைத்து எள்ளி நகையாடும் அவலநிலை மறுபுறம் என்று உலகத்தில் பெண்ணினம் சீரழிந்துகொண்டிருந்தது. பெண்ணைப் போகப் பொருளாய், விற்பனைப் பொருளாய் பார்த்த, பிறந்த உடனேயே குழிதோண்டிப் புதைத்த ஒரு காலம் இருந்ததை நாம் அறிவோம். அல்லாஹ் தஆலா கூறுகிறான்:
''அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்''. (திருக்குர்ஆன்: 16:58) இந்நிலையில்தான் இஸ்லாம் என்ற உன்னத மார்க்கம் பெண்ணுக்கு உயிரோடு உணர்வும், அறிவோடு ஆன்மாவும் உண்டு என்பதை உலகுக்கே உரத்துச் சொன்னது. தாய்மையை மேன்மைப்படுத்தியது. பெண்ணுக்கும் உரிமைகள் உண்டென்பதை, சொத்துரிமை முதல் திருமணத்தில் பெண்ணின் விருப்பத்துக்கு மதிப்பளிப்பது வரை பெண்ணை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது.
ஃபர்தா என்ற உன்னத வரையறையை வழங்கி அவளைக் கண்ணியப்படுத்தியது. மஹர் எனும் உரிமையை வழங்கி அவளின் எதிர்காலத்துக்கு உத்தரவாதமளித்தது.
பெண்பிள்ளைகளைப் பெற்று நல்ல முறையில் வளர்த்து உரியமுறையில் திருமணமுடித்துக் கொடுக்கும் தந்தைக்கு சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டது.
மனைவி என்ற நிலையில், 'உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியருக்குச் சிறந்தவர்களே!' என்று அவளுக்கு உயர்வளித்தது.
தாய் என்ற நிலையில், 'உறவுகளில் முதன்மையாய் நேசிக்கப்படத் தகுதியான முதல் மூன்று இடங்களையும்' தாய்க்கே வழங்கியது.
இப்படி எத்தனை எத்தனை உன்னதங்களை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது!
எல்லாம் சரிதான்! ஆனால்....
இன்றைய நமது சமுதாயத்தின் யதார்த்தம் என்ன?
இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள இந்த உன்னதங்களையெல்லாம் குறைவே இன்றி நமது சமுதாயம் பெண்ணுக்கு உள்ளபடி வழங்கியுள்ளதா?
அவள் கண்ணியத்துக்குரியவளாய் மதிக்கப்படுகிறாளா?
பெண்பிள்ளை பிறந்துவிட்டால், 'ஐயோ! இவளை எப்படிக் கரைசேர்ப்பேன்?' என்று பெற்றோர் கவலையோடு திகைத்துப்போகும் நிலை இன்று இல்லவே இல்லையா?
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (திருக்குர்ஆன்: 4:4)
என்றுதான் அல்குர்ஆன் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் எமது சமூகத்தில் இஸ்லாம் சொல்லாத சீதனம் என்ற அனாச்சாரம் தலைவிரித்து ஆடவில்லையா? இலங்கையில் ஒரு குறித்த பிரதேசத்தில் இன்றுவரை முஸ்லிம்கள் மத்தியில் ஒவ்வொரு பெண்குழந்தைக்கும் தனித்தனி வீடுகட்டி, அதற்குரிய பொருட்களையெல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. மாப்பிள்ளையின் தகுதிக்கு ஏற்றபடி (இன்ஜினியர், டொக்டர், லோயர் என்ற ஒவ்வொரு தரத்துக்கும் ஒவ்வொரு ரேஞ்சில் ரேட் நிர்ணயிக்கப்படுகிறது) கார், கொழும்பில் வீடு என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். வேறு பகுதிகளில் இரகசியமாக ரொக்கம் வாங்கி அதில் ஓர் அற்பத் தொகையை 'மஹர்' என்று ஒப்புக்குக் கொடுக்கும் அவலம் இன்னுமே முற்றாக முடிவுக்கு வரவில்லை. இஸ்லாத்திற்கு எதிரான சீதனத்தைக் கொடுத்து மாப்பிள்ளையை 'விலைகொடுத்து வாங்க' மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்கும் பெண்கள் பலர் முதிர்கன்னிகளாய் வீட்டுக்குள் வலம்வரும் நிலை. சீதனம் ஹராம் என்று தெரிந்தும் பெண்ணுக்கு இன்னும் வயதேறினால் அறவே திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்ற அச்சத்தில் எப்படியோ மாப்பிள்ளை வீட்டார் கேட்பதைக் கொடுத்து பெண்ணை 'வாழவைத்து'விடும் பலர். மார்க்கத்தைக் கற்ற நமது இளைஞர்களில் அனேகர் திருமண விடயத்தில் மட்டும் 'உம்மாவுக்காக!' என்று 'தாய் சொல் தட்டாத தனயர்களாய்' மாறி லட்சங்களுக்குத் தன்னை விற்றுவிடத் தயங்காத பின்னடைவு அல்லது பெண்பார்க்கும் போதே நல்ல 'பசை'யுள்ள புளியங்கொம்பாகப் பார்த்துப் பிடித்துக்கொள்ளும் சாமர்த்தியம் (!?!). இன்னொருபுறம் திருமணத்தின் பின்னர் 'பிறருக்கு அழகுகாட்ட' என்று ஏற்கெனவே அவள் போட்டிருந்த ஃபர்தாவைக் கழற்றிவிட்டு வெறுமனே ஒப்புக்கு ஷால் போடுமாறு நிர்ப்பந்திக்கும் 'வீரம்?!' கூட ஆங்காங்கே வெளிப்படத்தான் செய்கிறது. இப்படி இப்படி எத்தனை! எதைச் சொல்ல? எதை விட?
பெண்கள் நான்கு காரணங்களுக்காகத் திருமணமுடிக்கப்படுகின்றனர் என்று கூறிய இஸ்லாம், இறுதியில் 'மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே தெரிவுசெய்யுங்கள்' என்று கூறியிருப்பதை எத்தனை பேர் பொருட்டாகக் கருதுகின்றார்கள்? மார்க்கம் கற்றவர்கள்கூட வெள்ளைத் தோலை வலைபோட்டுத் தேடும் நிலை இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்லிவிடத்தான் முடியுமா என்ன?
கணவன் மரணித்தபின் விதவையான பெண்களுக்கோ திருமண வாழ்வில் தோல்வியுற்று நிற்கும் பெண்களுக்கோ மறுவாழ்வு கொடுக்கும் துணிவு நமது இளைஞர்களில் எத்தனை பேருக்கு வந்துள்ளது? அப்படியே தமக்கிருக்கும் உரிமையைப் பயன்படுத்தி இரண்டாம் திருமணம் முடிப்போர்கூட இருபதுக்குள் இளம் கன்னியையே தேடி மணக்கும் நிலைதானே பெரும்பாலும் நடைமுறையில் இருக்கிறது?
மஹர் என்பதன் தாத்பரியத்தை உணராமல் ஐநூறோ ஆயிரமோ ஒப்புக்குக் கொடுக்கும் நிலையில், தன் கணவனை இழந்த அல்லது விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணின் எதிர்காலத்துக்கான உத்தரவாதம் சமூகத்தால் வழங்கப்பட்டுள்ளதா?
அல்லாஹ் கூறுகிறான்: ''இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.'' (திருக்குர் ஆன்: 2:41)
''(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்;. பாலூட்டும் தாய்மாகளுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்;. எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.'' (திருக்குர் ஆன்: 2:233.)
பெண்ணை தலாக் சொன்னபின் அவளையோ குழந்தைகளையோ ஏறிட்டும் பாராமல் கைவிட்டுப் போகும் ஆண்கள் எமது சமூகத்தில் எத்தனை பேர் உள்ளனர்? நமது ஆலிம்களில் எத்தனை பேர் தமது ஜும்ஆப் பிரசங்கங்களில் இவற்றைப் பற்றியெல்லாம் எடுத்துச்சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றார்கள்? பொறுப்பிலிருந்து நழுவிச் செல்லும் ஆண்களைத் தண்டித்தோ கண்டித்தோ பெண்ணுக்கு நியாயம் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைதான் எமது சமூகத்தில் காணப்படுகின்றதா?
தமக்கு சீதனம் சேர்க்கவும், நிர்க்கதியான நிலையிலிருக்கும் தமது குடும்பத்தைப் பராமரிக்கவும் என்று எத்தனை ஆயிரம் முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கில் பணிப்பெண்களாய் முதுகுமுறிய வேலைபார்க்கிறார்கள்?
மஹ்ரம் துணையின்றி வேலை வாய்ப்புக்காக தனியே வெளிநாடு போவது ஹராம் என்று 'ஃபத்வா' கொடுக்கும் நமது மார்க்கமேதைகள் இந்த விஷச் சக்கரத்திலிருந்து பெண்களும் நம் சமூகமும் மீள்வதற்கான தயாரிப்புகளைச் செய்துகொடுப்பது பற்றி சமூகத்தைத் தட்டியெழுப்பவோ, அந்நிய கலாசாரத்தால் சீர்கெட்டுப் போயுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பவோ என்ன தயாரிப்புகளைச் செய்துள்ளார்கள்?
நமது இஸ்லாமிய இயக்கங்கள் இந்த அவலங்களை ஒழித்து சமூகத்தின் கண்களாய் உள்ள பெண்களின் கண்ணீர் துடைக்க என்னென்ன தீர்வுத் திட்டங்களை முன்வைத்து நடைமுறைப்படுத்தி வருகின்றன?
இஸ்லாம் வாழும் மார்க்கம். வாழ்வு முழுமையும் வணக்கம் என்று கற்றுத் தந்துள்ள உன்னத மார்க்கம். எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு தந்துள்ள நடைமுறை மார்க்கம். அப்படியிருக்க யதார்த்தநிலை எவ்வளவு நேர்மாறாக இருக்கிறது?
இன்னொருபுறம், திருமணத்தின் பின் சதா வேலை...வேலை என்ற அவதிப்படும் தமது மனைவியருக்கு ஓய்வு நேரத்திலாவது சற்று ஒத்தாசை செய்துகொடுக்கும் ஆண்கள் எத்தனை பேர்? விடுமுறை நாளில் சமையலுக்கு ஓய்வுகொடுத்துவிட்டு வெளியில் போய் சாப்பிட்டு வரலாம் என்றோ வெளியில் இருந்து சாப்பாடு தருவிக்கலாம் என்றோ ஆதரவாய்க் கூறும் ஆண்கள் எத்தனைபேர்? அவள் செய்யும் பணிகளில் நல்லவற்றை நாலு வார்த்தையில் பாராட்டி, அவளுக்கு நன்றி தெரிவிக்கும் இங்கிதம் எத்தனை பேரிடம் உள்ளது?
மாதவிடாய்க் காலங்களிலும் தாய்மையுற்றுக் கருவைச் சுமந்திருக்கும் நிலையிலும் பெண்கள் உளவியல் ரீதியாக சஞ்சலமுற்ற நிலையில் காணப்படுவர் என்பதை உளவியலும் மருத்துவமும் சொல்லியுள்ள நிலையில் எத்தனைபேர் அவளுடன் இதமாக, ஆதரவாக, ஆறுதலளிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்கள்? கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்றதுக்குப் பரவாயில்லை, தொடர்ந்து படி என்றோ உன் ஆற்றல்களை சமூக மேம்பாட்டுக்காய்ப் பயன்படுத்து என்றோ ஊக்கமளிக்கும் ஆண்கள் எத்தனைபேர்?
கண்ணியத்துக்குரிய என் அன்புச் சகோதரர்களே!
கற்பூரம் சுமக்கும் கழுதைகள் போல உன்னத மார்க்கமொன்றை, இறையோனின் மாபெரும் ஒளிவிளக்கைச் சுமந்திருந்தும் போகும் வழிதெரியாமல் இருட்டுக்குள் குருட்டுத் தவம் செய்து கொண்டிருக்கும் நமது சமுதாயத்தின் அவலநிலையையும், பெண்களின் முடிவலித் துயரங்களையும் கண்டும்கேட்டும் மனம் வெதும்பிப் போன நிலையில் எழுந்த கேள்விகள் இவை. இஸ்லாத்தில் பெண்ணுக்கு 'எல்லாம்' இருக்கின்றதுதான். எனவே, புதிதாக நமக்கு யாரும் உரிமை பெற்றுத்தரத்தேவையில்லை. அல்லாஹ் ஏற்கெனவே தந்திருக்கிறான் நிரப்பமாக! ஆனால், அவை நமது பெண்களுக்குத்தான் இன்னும் வந்து சேரவில்லை. இஸ்லாத்தில் இருக்கிறது. முஸ்லிம் சமூகத்திடம் நடைமுறையில் இல்லை. இனியேனும் இந்நிலை மாறுமா? பெண்களின் அவலம் தீருமா? சகோதரர்களே பதில்கூறுங்கள்!
ஜஸாக்கல்லாஹு கைரன்! 

 



News: லறீனா அப்துல் ஹக்

Wednesday, June 1, 2011

காதல் என்றால் என்ன....? எது உண்மையான காதல்...?

Best Blogger Tips

உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.
இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.
முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே! ] 
காதல் என்றால் என்ன?
எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்!’ - இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். `காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்!
காதல் செய்யும் மனிதர்களில் சுமார் பத்து சதவீதம் பேர்கூட திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை! சுமார் 60 சதவீத காதல், திருமணம் என்ற பேச்சினை எட்டும் முன்னரே கலைந்து போய் விடுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இருவருமே முதன்முறையாக காதலில் விழும்போது அவசரபட்டு விடுவதுதான். பின்னர் இது காதல் இல்லை. நம் வாழ்க்கைக்கு இது சரிபடாது என்று பிரிந்து விடுகின்றனர்.
பருவ மாற்றம் காரணமாக இரண்டுங்கெட்டான் பருவத்தில் எதிர்பாலினத்தவரை பார்த்ததும் ஈர்ப்பு உண்டாகிறது. அதை காதல் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். அது வெறும் இனக்கவர்ச்சி. ஆகவே திருமணத்திற்குப்பின் கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஈர்ப்புத்தான் உண்மையான காதல் என்று தாளாரமாகச் சொல்லலாம்.
காமம் என்பதில் காதல் இருக்க வேண்டிய அவசியமில்லை. காமம் என்பது காதல் ஆகாது. ஆனால் காதலில் காமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. அது ஒரு சிலருக்கு பெரும்பகுதியாகவும், சிலருக்கு முழு பகுதியாகவும் அமையலாம். திருமணத்திற்குமுன் ஏற்படும் காதல் பெரும்பாலும் காமத்தை நோக்கியே நகரும். இல்லையென்று சிலர் மறுத்தாலும் உண்மை அதுதான் என்பது எதார்த்தம்.
ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றவதாக (அவர்களைக்கெடுப்பதற்காக) ஷைத்தான் அங்கு நிச்சயம் இருப்பான் என்னும் இஸ்லாமிய கண்ணோட்டம் மிகவும் சரியானதே என்பதை விஞ்ஞான ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.
ஒரு ஆணும் பெண்ணும் பேசும்போது அவர்களுக்குள்ள இடைவெளியைப்பொருத்து அவர்கள் கெடுவதற்குள்ள வாய்ப்பைப்பற்றி குறிப்பிடும்போது, ஒரு அடி இடைவெளிக்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நான்கு முறை அருகருகே நின்று பேசினால் கெடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்கிறார்கள்.
ஆகவே அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை போன்ற காதலே உன்னதமானது. இந்த உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!
திருமணத்துக்குமுன் காதலா...
கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தன்னுடன் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் தீவிர நட்புடன் பழகுவதுண்டு. இந்த நட்பில் நல்ல நம்பிக்கை இருக்கும். இதில் எல்லோருக்கும் காமம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரிடையே மட்டும் இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அன்பு, நட்பு, அளவுகடந்த பாசம் போன்றவற்றிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலே எல்லாவற்றைம் காதல் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்.
குடும்பத்தை பற்றி அக்கறை இல்லாமல் சிலர், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதிர்கால வாழ்வு பற்றிய எவ்வித பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் உண்மையான காதலாக இருக்க முடியாது. ஆனால் வெளிலகிற்கு இவர்கள் தீவிர காதலர்கள் போல் தோன்றுவார்கள்.
பொழுதுபோக்கிற்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லூரி மற்றும் தாம் பணியாற்றும் இடங்களில் தன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்பதற்காக யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு காமம்தான் அடிப்படை. இவர்களுக்குள் ஓரளவுதான் நம்பிக்கை இருக்கும். ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பே இருக்காது. ஆனால் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றுவார்கள். பலர் முன்னிலையில் தீவிரமாக காதலிப்பது போல் நடிப்பார்கள். இதை தேறாத காதல் என்று கூறிவிடலாம்.
சினிமா நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள். இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை மூடத்தனமான காதல் என்றும் பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம். ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும், குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள். டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே காமம் மட்டுமே இருக்கும்.
இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும். காமத்திற்கும், காதலுக்கும் பெருமளவு தொடர்பில்லை. காமம்தான் காதல் என்று சிலர் சொல்வது அவர்களின் அறியாமையே. இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதே இயல்பான காதலின் ஆணிவேர். காதலில் விழுந்த பிறகு, ஒரு ஆணுக்கு, தாம் நேசிக்கும் பெண்தான் உலகிலேயே அழகியாகத் தெரிவாள். (அது உங்கள் மனைவியாக இருக்கட்டுமே) பிறரது விமர்சனங்களை பற்றி கண்டு கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். அதுபோலவே ஓர் ஆணின் புற அழகை பார்த்தே பெண்கள் காதலுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த அழகு அவர்களுக்கு பிடித்திருக்கும் அவ்வளவுதான். இவையத்தனையும் போலியான காதல்.
உண்மையான காதல்
உண்மையான காதல் என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது, இருக்க வேண்டியது. உங்கள் உண்மையான காதலி உங்கள் மனையாகவே இருக்கட்டும். ஆகவே மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம்; ''உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!
               
              அல்லாஹ்வே மிக அறிந்தவன்
Artist:Rasmy Rasik


Text Widget

Text Widget