Sunday, October 30, 2011

யூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்!

Best Blogger Tips
இஸ்ரேலின் உளவுப் பிரிவு மொசாத் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறது. அதற்கு என்னென்ன முயற்ச்சிகளை எடுக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது ஒரு பழைய நிகழ்ச்சி!

1970 வாக்கில் பாலஸ்தீனர்களின் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. இஸ்ரேலியர்கள் தாக்குபிடிக்க முடியுமா என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் நடந்த தாக்குதல் பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவே இஸ்ரேலியர்கள் எண்ணினர். இதை இப்படியே வளர விட்டால் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்ற நோக்கில் பாலஸ்தீனர்களின் முன்னேற்றத்துக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஒரு தடை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்க தொடங்கியது இஸ்ரேலிய அமைச்சரவை.

Saturday, October 29, 2011

பண்டிகைக்காலச் சலுகை அறிவிப்புகள்

Best Blogger Tips
வணிகத்தில், வணிகர்களின் மக்கள் ஈர்ப்புத் தூண்டில் ஒன்று உண்டு - ‘பண்டிகைக்காலச் சிறப்புச் சலுகை தள்ளுபடிகள்’. இன, மொழி பேதமின்றி உலகமெங்கும் இது பொது. தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகரிலே ஆடித் தள்ளுபடி, தீபாவளி விசேஷத் தள்ளுபடி, ரம்‘ஜா’ன் தள்ளுபடி என்று வஞ்சனையில்லாமல் ஏதாவது விசேஷம் அடிக்கடி வந்துவிடுகின்றது.

Monday, October 24, 2011

முஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா?

Best Blogger Tips
ஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டு, இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்துவதற்காக - திருக்குர்ஆனில் வரும் ஒருசில வசனங்களைத் தங்கள் வாதத்தை நிறுவுவதற்காக தவறுதலாக பொருள் கற்பித்து இஸ்லாத்திற்கு எதிராக சிலர் செய்யும் அவதூறு பிரச்சாரங்களில் ஒன்று தான் இந்த - "இஸ்லாமியர்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லச்சொல்லி குர்ஆன் கட்டளையிடுவதாக" கூறப்படும் வாதம்.

Sunday, October 23, 2011

ஐரோப்பா பெண்கள் பெற்றிருப்பது சுதந்திரமா?

Best Blogger Tips
சமீபத்தில் இணையச் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போலவே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்று மக்கள் கலை இலக்கியக் குழவைச் சேர்ந்த நண்பர்கள் விமர்சனம் எழுதி இருந்தார்கள்.

Saturday, October 22, 2011

"இவர்கள் யார் என்று தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர்கள் இப்போது எங்கே?

Best Blogger Tips
"பாபரி மஸ்ஜிதை இடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் , இடிக்கபட்ட அன்று பள்ளியின் மேலே உச்சியில் (குப்பாவில்) நின்று அதை ஆவேசத்துடன் இடித்த இரு இளைஞர்கள் தங்கள் இடித்த பள்ளியின் இடிபாடுகளின் கல்லை தங்களின் சொந்த ஊருக்கு எடுத்து சென்றுள்ளார்கள்.பாணிப்பூர் என்ற ஊரை சேர்ந்த அந்தஇரண்டு இளைஞர்களும் அந்த இடிபாடுகளை ஒரு பள்ளிவாசல் முன்பு கொட்டி அதில் சிறுநீர் கழித்து அங்குள்ள இஸ்லாமியர்களை மனம் புண்பட செய்துள்ளனர்.

2009 ஜூலை 5 மறந்து விட்டீர்களா ?ஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணியை .

Best Blogger Tips
நீதிமன்றில்..
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
காவல் துறை கண்முன்பு 
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட
சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?

இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக  ஜூலை 05 2009 ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்'நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.

"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில்,ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.

தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.

திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர.

அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.

உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?

ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?

ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?

மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல்ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?

Text Widget

Text Widget