Tuesday, May 31, 2011

இஸ்லாத்தில் குடும்பம்

Best Blogger Tips

இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செய்யப்படுகின்ற அருள்மிக்க ஒப்பந்தமாகும். அதன் மூலமாகவே இருவரில் ஒருவர்
மற்றவருக்கு ஆகுமாக்கப்படுவதன் காரணமாக நீண்ட ஒரு வாழ்க் கைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
இதன்காரணமாக ஒருவருக் கொருவர் நேசம் கொண்டவர்களாகவும்அன்பு கொண்டவர்க ளாகவும் புரிந்துணர்வுஉதவி,ஒத்தாசை கொண்டவர்களாகவும் ஒருவர் மற்றவரைக் கொண்டு நிம்மதியையும் அமைதியையும்
பெறுகின்றவர் களாகவும் இருக்கின்றனர்.
அல்லாஹுதஆலா அல்குர் ஆனில் கூறும்போது "நீங்கள் சேர்ந்து வாழக் கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து உங் களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பது அவனு டைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (30: 21)
இவ்வாறு இறைவனால் வழங் கப்பட்டுஇறையச்சம் கொண்ட இஸ்லாமிய குடும்பப் பாசறையில் வளர்கின்ற பிள்ளைகள் ஈமானிய வழிகாட்டலுடன் வளர்த்தெடுக்கப்பட்டு இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றுகிறார்கள். அவ்வாறு கட்டியெழுப்புவது எமது கடமையும்கூட.
இஸ்லாமிய குடும்பத்தின் உறுப்பினர்கள் இறையச்சம் உள்ளவர்களாகவும் நன்மையில் ஒருவருக்கொருவர் உதவக்கூடிய வர்களாகவும் நன்மையான விட யங்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்துப வர்களாகவும் இருப்பார்கள். அவ்வாறே இறையச்சம் உள்ள ஒழுக்கமுள்ள பெண்ணே ஒரு முஸ்லிம் குடும்பத்துக்கு அடிப்படைத் தூணாக விளங்குகி றாள்.
அதனால்தான் மௌலானா மௌதூதி (றஹ்) அவர்கள் இவ்வாறு கூறினார் கள்; "ஒரு பெண் சீர்பெற்றுவிட்டால் ஒரு சமூகம் சீர்பெற்றுவிடும் என நான் உத்தர வாதம் தருகிறேன்".
ஆகவேஒரு குடும்பத்தின் சீரான வாழ்க்கைக்கு அந்தக் குடும்பத்தின் பெண் ணின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகும். சிறந்த எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதில் ஒரு பெண்ணின் பங்களிப்பு அளப்பரியது. நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள்; "உலகிலுள்ள அனைத்தும் செல்வமாகும். அந்த செல்வத்தி லேயே மிகச் சிறந்த செல்வம் நல்லொழுக் கமுள்ள பெண்ணாவாள்."
அல்லாஹ் ஆண்களுக்கு வழங்குகின்ற அருட்கொடைகளிலேயே பெரிய அருட்கொடை நல்லொ ழுக்கமுள்ள பெண் அமைவதாகும். அதன் மூலம் அடைகின்ற ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் இந்த உலகில் எந்தச் செல்வமும் ஈடாகாது. எனவேசிறந்ததொரு குடும்பம் அமைய நற்குணமுள்ள பெண் அவசியப்படுவது போல சிறந்த ஒரு ஆணின் பங்களிப்பும் அவசியமானதா கும்.
பாஹிமா பர்வின்
விருதோடை

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget