Thursday, December 15, 2011
Tuesday, December 6, 2011
இலங்கையில் தலைவிரித்தாடும் கப்று வணக்கம்
இலங்கையில் 8ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15ஆம் நூற்றாண்டு வரை முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான அறிஞர்களை தம்மகத்தே கொண்டிருந்தனர். பல உலமாக்களும் மார்க்க அறிஞர்களும் அவர்களிடையே காணப்பட்டதுடன் தம்மால் இயன்றவரை மார்க்கத்தை எடுத்து நடப்பதிலும் இலங்கை முஸ்லிம்கள் தனித்துவம் பெற்றிருந்தனர். இஸ்லாத்தை ஆசிய நாடுகளிலிருந்து அழிக்கும் நோக்குடன் வந்த போர்த்துக்கீஸரும் அவர்களைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தரும் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட உலமாக்களையும் மார்க்க அறிஞர்களையும் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். இதன் விளைவாக அடுத்த தலைமுறையினர் குர்ஆனை கற்பதற்கான வாய்ப்புகள் குறைந்தன. இந்தியாவிலிருந்து உலமாக்களும் மார்க்க அறிஞர்கள் வருவது தடைசெய்யப்பட்டதுடன் இலங்கைக்குள்ளும் முஸ்லிம்களின் போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டன. இதனால் இஸ்லாமிய அறிவு மக்களிடையே மங்கிப்போகத் தொடங்கியது. Monday, December 5, 2011
Wednesday, November 2, 2011
அரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா
ஹஜ்ஜுப் பெருநாள் வருகின்றது. லங்கா முஸ்லிம் இணையத்தள வாசகர்கள் அத்தனை பேருக்கும் எனது ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும். மேலும் இனிய பெருநாளை சிறப்பாக கொண்டாட இறைவன் அருள் புரிவானாக! ஆமீன்.
இம்முறை ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா விடயத்தில் சில குழப்பங்கள் நிகழலாம். ஆடு மாடுகளை கொண்டு செல்வதிலும் அவற்றை அறுப்பதிலும் சில சிக்கல்கள் ஏற்படலாம். எனவே அது சம்பந்தமான சில அறிவுரைகளை கூறுவது நல்லது என நினைக்கிறேன். அவை சில காரணங்களால் இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் தரப்பட்டுள்ளது. அவற்றை வாசிப்பது மிகவும் பயனுள்ளதாகவும் பிரச்சினைகளை தவிர்க்கவும் இன்ஷா அல்லாஹ் உதவும். இனி அரபா நாள் நோன்பு ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் உழ்கிய்யா சம்பந்தமான சில விடயங்களைப் பார்ப்போம்.
Sunday, October 30, 2011
யூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்!
இஸ்ரேலின் உளவுப் பிரிவு மொசாத் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறது. அதற்கு என்னென்ன முயற்ச்சிகளை எடுக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது ஒரு பழைய நிகழ்ச்சி!
1970 வாக்கில் பாலஸ்தீனர்களின் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. இஸ்ரேலியர்கள் தாக்குபிடிக்க முடியுமா என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் நடந்த தாக்குதல் பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவே இஸ்ரேலியர்கள் எண்ணினர். இதை இப்படியே வளர விட்டால் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்ற நோக்கில் பாலஸ்தீனர்களின் முன்னேற்றத்துக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஒரு தடை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்க தொடங்கியது இஸ்ரேலிய அமைச்சரவை.
1970 வாக்கில் பாலஸ்தீனர்களின் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. இஸ்ரேலியர்கள் தாக்குபிடிக்க முடியுமா என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் நடந்த தாக்குதல் பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவே இஸ்ரேலியர்கள் எண்ணினர். இதை இப்படியே வளர விட்டால் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்ற நோக்கில் பாலஸ்தீனர்களின் முன்னேற்றத்துக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஒரு தடை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்க தொடங்கியது இஸ்ரேலிய அமைச்சரவை.
Saturday, October 29, 2011
பண்டிகைக்காலச் சலுகை அறிவிப்புகள்
வணிகத்தில், வணிகர்களின் மக்கள் ஈர்ப்புத் தூண்டில் ஒன்று உண்டு - ‘பண்டிகைக்காலச் சிறப்புச் சலுகை தள்ளுபடிகள்’. இன, மொழி பேதமின்றி உலகமெங்கும் இது பொது. தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகரிலே ஆடித் தள்ளுபடி, தீபாவளி விசேஷத் தள்ளுபடி, ரம்‘ஜா’ன் தள்ளுபடி என்று வஞ்சனையில்லாமல் ஏதாவது விசேஷம் அடிக்கடி வந்துவிடுகின்றது. Monday, October 24, 2011
முஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா?
இஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டு, இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்துவதற்காக - திருக்குர்ஆனில் வரும் ஒருசில வசனங்களைத் தங்கள் வாதத்தை நிறுவுவதற்காக தவறுதலாக பொருள் கற்பித்து இஸ்லாத்திற்கு எதிராக சிலர் செய்யும் அவதூறு பிரச்சாரங்களில் ஒன்று தான் இந்த - "இஸ்லாமியர்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லச்சொல்லி குர்ஆன் கட்டளையிடுவதாக" கூறப்படும் வாதம்.Sunday, October 23, 2011
Saturday, October 22, 2011
"இவர்கள் யார் என்று தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர்கள் இப்போது எங்கே?
"பாபரி மஸ்ஜிதை இடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் , இடிக்கபட்ட அன்று பள்ளியின் மேலே உச்சியில் (குப்பாவில்) நின்று அதை ஆவேசத்துடன் இடித்த இரு இளைஞர்கள் தங்கள் இடித்த பள்ளியின் இடிபாடுகளின் கல்லை தங்களின் சொந்த ஊருக்கு எடுத்து சென்றுள்ளார்கள்.பாணிப்பூர் என்ற ஊரை சேர்ந்த அந்தஇரண்டு இளைஞர்களும் அந்த இடிபாடுகளை ஒரு பள்ளிவாசல் முன்பு கொட்டி அதில் சிறுநீர் கழித்து அங்குள்ள இஸ்லாமியர்களை மனம் புண்பட செய்துள்ளனர்.2009 ஜூலை 5 மறந்து விட்டீர்களா ?ஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணியை .
நீதிமன்றில்..
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
காவல் துறை கண்முன்பு
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட
சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா.... ?
இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக ஜூலை 05 2009 ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்'நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.
"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.
துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில்,ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.
தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.
திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர.
அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.
உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?
ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?
ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?
மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல்ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
காவல் துறை கண்முன்பு
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட
சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....
இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக ஜூலை 05 2009 ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்'நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.
"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.
துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில்,ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.
தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.
திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர.
அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.
உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?
ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?
ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?
மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல்ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?
Friday, July 1, 2011
'முஸ்லிம்கள் இஸ்லாம் பற்றி சொல்லித்தரவில்லை' - பேராசிரியர் அப்துல்லாஹ் வேதனை
முஸ்லிம் பெயர்களை சூட்டிக் கொண்டவர்கள் மாத்திரம் முஸ்லிம்கள் அல்ல. அல்குர்ஆனையும், அல் ஹதீஸையும் விளங்கி அதன்படி நடப்பவர்களே முஸ்லிம்கள் இவ்வாறு பேராசிரியர் அப்துல்லா (பெரியார் தாசன்) குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் மார்கச் சொற்பொழிவுகளை நடத்திவரும் அவர் மருதானையில் நடைபெற்ற சொற்பொழிவில் மேலும் கூறியிருப்பதாவது,
நான் இணைவைக்காதவனாக இருந்தேன். எனது 16 வயதிலிருந்து இறைவனை தேடுபவனாக இருந்தேன். எனினும் எனக்கு எந்த முஸ்லிம்களும் இஸ்லாம் பற்றி சொல்லித்தரவில்லை. குர்ஆனில் என்ன இருக்கிறது? ஹதீஸில் என்ன இருக்கிறது என்று முஸ்லிம்கள் எவரும் எனக்கு எதையும் சொல்லவில்லை. நானே குர்ஆனைத் தேடி அதில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்தேன்.
குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. அது உலக மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனை அனைவரும் படிக்கலாம். புரிந்து கொள்ளலாம். ஆனால் முஸ்லிம்கள் அது தமக்குரியது மாத்திரமே என்று நினைத்து மற்றவர்களுக்கு அதை படிக்கக் கொடுப்பதில்லை. இவ்வாறு இருந்தால் இணைவவைப்பவர்கள் எவ்வாறு இஸ்லாத்தைப்பற்றி அறிய முடியும்? எவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள முடியும்?
இறை நம்பிக்கையை ஏற்றுள்ள முஸ்லிம் சமூகும் ஏனைய சமூகங்களுக்கு இன்று துiரோகமிழதை;துக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்கள் தஹ்வா பணியில் சரியாக ஈடுபடுவதில்லை. ஏனைய சமூகத்தவர்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்ள முஸ்லிம்கள் உதவுவதில்லை.
எனவே முஸ்லிம்கள் அல்குர்ஆன் என்ன நோக்கத்திற்காக அருளப்பட்டது, யாருக்காக அருளப்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வெறுமனே முஸ்லிம் பெயர்களை சூட்டிக் கொண்டவர்கள் மாத்திரம் முஸ்லிம்கள் அல்ல. அல்குர்ஆனையும், அல் ஹதீஸையும் விளங்கி அதன்படி நடப்பவர்களே முஸ்லிம்கள் என்வும் சுட்டிக்காட்டினார்.
News:Yarlmuslim
Friday, June 17, 2011
தாயின் காலடியில் சொர்க்கம்
* இறைவன் கூறுகின்றான்: பெற்றோர் நலன் பேண வேண்டும் என்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (எனவே) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து.
* நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
சுவனம் (சொர்க்கம்) தாயின் காலடியில் இருக்கிறது. (தாய்க்கு பணிவிடை செய்பவர் சுவனம் புகுவர்)
* இறைத்தூதரே! எனது பெற்றோர் இறந்த பின்னரும் அவர்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை ஏதும் எஞ்சியுள்ளதா என ஒரு நபித்தோழர் கேட்டார். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஆம்! அவர்களுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். அவர்களின் மரண சாசனத்தை நிறைவேற்றுங்கள். பெற்றோர்களின் உறவுகளைத் துண்டிக்காமல் வாழுங்கள். பெற்றோர்களின் நண்பர்களுக்கு கண்ணியம் அளியுங்கள். அவர்களை உபசரியுங்கள்.
( வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)
* நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
சுவனம் (சொர்க்கம்) தாயின் காலடியில் இருக்கிறது. (தாய்க்கு பணிவிடை செய்பவர் சுவனம் புகுவர்)
* இறைத்தூதரே! எனது பெற்றோர் இறந்த பின்னரும் அவர்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை ஏதும் எஞ்சியுள்ளதா என ஒரு நபித்தோழர் கேட்டார். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஆம்! அவர்களுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். அவர்களின் மரண சாசனத்தை நிறைவேற்றுங்கள். பெற்றோர்களின் உறவுகளைத் துண்டிக்காமல் வாழுங்கள். பெற்றோர்களின் நண்பர்களுக்கு கண்ணியம் அளியுங்கள். அவர்களை உபசரியுங்கள்.
( வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)
Tuesday, June 14, 2011
லண்டனில் இஸ்லாமிய சமூகப் புரட்சி: உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்
லண்டன் இஸ்லாமிய தவ்வா செண்டர் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யும் இஸ்லாமிய மாநாடு தற்போது லண்டன் தவ்வா செண்டரில் நடை பெற்றுகொண்டிருகின்றது அதில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இறுதி தூதரின் இனிய அழைப்பு – இஸ்லாமிய சமூக புரட்சி என்ற தலைப்பில் உரையாற்றி கொண்டிருகின்றார் என்று அங்கிருந்து அலி ரிஸான் அவர்கள் lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார்.அங்கு உரையாற்றும் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதரின் அழைப்பு ஒரு முழுமையான சமூக புரட்சியாக இருந்தது என்றும் அல்லாஹ்வின் தூதர் ‘கூனு லாயிலாக இல்லலாஹ் துப்ளிஹூன் ‘ அல்லாஹ்வை தவிர வேறு ‘இலாஹ்’ இல்லை என்று ஏற்றுகொள்ளுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று மக்களை அழைத்தார்கள் அந்த வெற்றியின் ஒன்று மறுமையில் சுவர்க்கம் என்ற வெற்றி இரண்டாவது வெற்றி இந்த உலகில் நீங்கள் ஏற்றுகொள்ளும் இந்த கொள்கை நிலைநாட்டப்பட்டு நீங்கள் அரபிகளுக்கும் அஜமிகளுக்கும் ஆட்சியாளராக இருப்பீர்கள் என்பதாக இருந்தது என்று தெரிவித்தார் விரிவாக
இதுதான் அல்லாஹ்வின் தூதரின் அழைப்பாக இருந்தது இந்த சமூக புரட்சிக்கான அழைப்பை அன்றைய மக்கள் தெளிவாக விளங்கி கொண்டார்கள் வெறுமனே அவரின் அழைப்பு சில தனிநபர்களில் அவர்களின் வாழ்கையில் சில மாற்றங்கள் தோற்று விற்பதாக இருக்கவில்லை மாறாக ஒரு பாரிய சமூக மாற்றத்தை வேண்டியது என்று உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றும் போது அல்லாஹ்வின் தூதரின் அழைப்பில் இரண்டு பக்கங்கள் வெளிப்பட்டன ஒன்று இஸ்லாத்தை ஏற்றுகொண்டால் சுவர்க்கம் என்பதும் மற்றது பாரிய சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டமாகவும் இருந்தது ஒரு முறை மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு சித்திரவதைகளை அனுபவித்து வந்த ஹப்பாப் இப்னு அரத் என்ற சஹாபி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எமக்காக அல்லாஹ்விடம் உதவி புரியுமாறு வேண்ட கூடாத ? என்று வினவியபோது அதற்கு பதில் தெரிவித்த அல்லாஹ்வின் தூதர் நீங்கள் அவசர படுகின்றீர்கள் உங்களுக்கு முன்பிருந்தவர்கள் நிலத்தில் கால்கள் வரை புதைக்கப்பட்டு தலையில் இருந்து கால்கள் வரை இரண்டாக பிளக்கபட்டார்கள் ஆனால் அவர்கள் இஸ்லாத்தை கைவிடவில்லை உயிரை விட்டார்கள்.
மேலும் அந்த சித்ரவதைக்கு முகம் கொடுக்கும் ஹப்பாப் இப்னு அரத் என்ற தோழரிடம் ஒரு காலம் வரும் அப்போது ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்றார்கள் இந்த சம்பவம் அன்று அல்லாஹ்வின் தூதர் எந்த பலமும் இன்றி இருந்தபோதும் தனது தோழர்கள் சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க எந்த சக்தியும் இல்லாதபோதும் கூட சன்ஆவில் – தற்போதைய யெமன் நாட்டின் தலைநகர் – இருந்து பல ஆயிரக்கணக்கான மயில்கள் துரத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் சித்திரவதை பட்டு வரும் தனது தோழருக்கு ஒரு காலம் வரும் அப்போது ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்று தெரிவித்தமை அவர் சமூக புரட்சி ஒன்றை வேண்டி நின்றார் என்பதைத்தான் காட்டுகின்றது என்று தெரிவித்தார்.
இதை அல்லாஹ்வின் தூதர் சொல்லும் போது அன்று மக்காவில் முஸ்லிம்கள் அடிக்குமேல் அடி வாங்கிகொண்டிருந்தார்கள் தம்மை பாதுகாக்க கூட அவர்களிடம் எந்த பலமும் இருக்கவில்லை கவ்பாவுக்குள் 360 விக்ரகங்கள் இருந்தன அவற்றை எதுவும் செய்யமுடியாத மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர்.
அடிபட்டு சித்திரவதைகளை பெற்றுவரும் தோழரிடம் ஆயிரக்கணக்கான மையில்களுக்கு அப்பால் உள்ள சன்ஆவை பற்றி பேசுகின்றார் அன்று அரேபிய தேசம் கொள்ளை கொலை வழிப்பறி என்று அனைத்து குற்றங்களும் நிறைந்து காணப்பட்டது தனது தோழர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருந்த அல்லாஹ்வின் தூதர் சித்திரவதை பட்டு வந்த தனது தோழரை தனக்கு முன் உக்காரவைத்து ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்று கூறியது அவர் பாரிய சமூக புரட்சியை சமூக மாற்றத்தி வேண்டிநின்றார் என்பதைத்தான் காட்டுகின்றது என்று தெரிவித்தார்
அதேபோன்று அல்லாஹ்வின் தூதர் கோத்திர தலைவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது இரண்டு விடயங்களை முன்வைத்தார்கள் ஒன்று நீங்கள் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவேண்டும் என்பதும் இரண்டாவது நீங்கள் ஏற்றுக்கொண்ட இஸ்லாத்தை இந்த பூமியில் நிலைநாட்ட நீங்கள் எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதாகும் இந்த இவரின் அழைப்பை கோத்திர தலைவர்கள் அன்று தெளிவாக புரிந்து கொண்டனர்.
ஒரு முறை ஆமிர் இப்னு சஹ்ஸா என்ற கோத்திரத்தின் தலைவரை அழைத்து அல்லாஹ்வின் தூதர் நீங்களும் உங்கள் சமூகத்தவர்களும் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவேண்டும் என்றும் ஏற்றுக்கொண்ட இஸ்லாத்தை இந்த பூமியில் நிலைநாட்ட நீங்கள் எனக்கு முழுமையாக உதவி புரியவேண்டும் என்று கோரினார்கள் அதற்கு தனது ஏனைய கோத்திர தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பதிலளித்த அந்த கோத்திர தலைவர் ஆம் நாங்கள் ஏற்றுகொள்கின்றோம் அனால் ஒரு நிபந்தனை உங்களின் மரணத்துக்கு பின்னர் தலைமைத்துவம் எங்களின் கோத்திரத்துக்கு தரப்படவேண்டும் என்று தெரிவித்தார் இந்த சம்பவங்கள் அல்லாஹ்வின் தூதர் பாரிய சமூக மாற்றத்தை நோக்கிய அழைப்பு விடுவதை அன்றைய மக்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதை காட்டுகின்றது என்று தெரிவித்தார் என்று அலி ரிஸான் தெரிவிக்கின்றார்.
இந்த மாநாட்டில் மேலும் மௌலவி உமர் சரீப் மற்றும் மௌலவி அப்துல் காதர் மதனி ஆகியோரும் உரையாற்றவுள்ளனர் கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹாம் ப்லாஷேட் பாடசாலையில் இந்த மாநாடு இடம்பெற்று வருகின்றது மாநாட்டில் ஏராளமான தமிழ் பேசும் இலங்கை இந்திய நாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
News:Lankamuslim
Monday, June 6, 2011
அல் குர்ஆனை அரசியல் களத்தில் தவறாக பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும்
இஸ்லாமிய அரசியல் என்பது அராஜகம் , பயங்கரவாதம் , இனவாதம் , துவேசம் , சிறு பான்மை ஒடுக்கு முறை போன்ற அணைத்து மனித விரோத உணர்வுகளுக்கும் நேர் எதிரானது அல் குர்ஆன் போதிக்கும் அரசியல் , பொருளாதார , சமுகவியல் , போரியல் கோட்பாடுகள் மனிதனையும் இறைவனையும் மிகவும் நெருக்கமாக தொடர்பு படுத்தி நிற்பவை அது போதிக்கும் நீதி என்றும் நிலையானது சொந்த இலாபங்களுக்காக ,தான் சார்ந்த கட்சியின் ஆட்களுக்காக , பச்சை , நீளம் , சிகப்பு என்ற நிரங்களுக்காக அதன் நீதி சாய்ந்து விடாது , இஸ்லாமிய அரசின் தலைவர் கலீபா குற்றம் செய்தால் அவரும் தண்டிக்கபடுவார் இஸ்லாமிய அரசியல் ஒவ்வோர் தனி மனிதனின் உரிமைகளையும் மிகவும் நுட்பமாக பாதுகாக்கும் தன்மை கொண்டது இதை தான் இஸ்லாமிய இரண்டாவது அரசியல் தலைவர் கலீபா உமர் இப்படி கூறினார் ” எனது ஆட்சியில் .. கடற்கரை .. ஒன்றில் ஒரு நாய் இறந்தாலும் அதற்கும் நான் ..பொறுப்பு சொல்லவேண்டும் என்றார் ” இவை வெறும் வார்த்தைகள் அல்ல உலகை ஆண்ட நடைமுறை அரசியல் . தனி நபர் சுதந்திரத்துக்காக சமூகத்தையோ , சமுகத்தின் சுதந்திரத்துக்காக தனி நபரையோ இஸ்லாமிய அரசியலில் பலி இடமுடியாது இந்த அரசியல் முற்றிலும் நடைமுறை சார்ந்தது இந்த உண்மையான நடைமுறை பண்புகளை கொண்ட அரசியல் யாப்புதான் அல் குர்ஆன் இதை எந்த அரசியல் கட்சி தவறாக பயன் படுத்த முற்பட்டாலும் அது மிக பெரிய குற்றமாகத்தான் அமையும்.உதாரணமாக கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி போகும் பஸ் நாங்கள் லண்டன் போகின்றோம் லண்டன் போகும் பிரயாணிகள் பஸ்ஸில் ஏறி கொள்ளுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானதுதான் நமது நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அல் குர்ஆனை பயன்படுத்துவது இந்த புதிய முறையற்ற பலக்கம் முற்றாக தவிர்க்க வேண்டும் முழு மனித சமூகத்துக்குமான விடிவு இஸ்லாம் கூறும் அரசியலில் மட்டும்தான் நடைமுறையில் இருக்கும் இஸ்லாம் கூறும் அரசியல் மனிதனை அணைத்து அடிமைத்தனத்தில் இருந்தும் விடுதலை செய்து பிரபஞ்சங்களின் இறைவனுக்கு மட்டும் கட்டுப்படும் மனிதனாக மாற்றும் தன்மை கொண்டது
Friday, June 3, 2011
லிபியா சொல்லும் சேதி!

நீங்கள் எத்தனைச் சின்னவர்கள் என்பதல்ல விசயம்! உங்கள் அபார நம்பிக்கையும் நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியை தீர்மானிக்கும்!
இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஒரு வட ஆப்பிரிக்க இளைஞனுக்கு முற்றிலும் பொருந்தும். 1960களில் அந்த வாலிபன், எகிப்தின் கமால் அப்துல் நாசரை வாசித்தான்; சீனாவின் மாவோவை படித்துப் பார்த்தான். அப்பொழுது அவனின் வயது இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் இடையில் தான்! சிறுபிள்ளை விவசாயம் வீடு வந்து சேராது என்று பெரியவர்கள் இளையவர்களை மட்டம் தட்டி வைப்பதை அந்த இளைஞனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் இராணுவ வேலைக்குப் போனான். போனவுடன் தலைமைப் பதவியா கொடுப்பார்கள்? மூன்றாம் நிலைதான். அடுத்தவர்கள் தனது தலைவிதியை நிர்ணயிப்பதை அந்த “”இளம் ரத்தம்” ஏற்றுக் கொள்ளவில்லை. தனது 27 வயதில் தானே தன் முன்னேற்றத்திற்கு அயராது உழைக்க ஆரம்பித்தான்.
Thursday, June 2, 2011
இஸ்லாத்தில் பெண்கள் நிலை: இன்றைய யதார்த்தம் என்ன?
மார்க்கத்தைக் கற்ற நமது இளைஞர்களில் அனேகர் திருமண விடயத்தில் மட்டும் 'உம்மாவுக்காக!' என்று 'தாய் சொல் தட்டாத தனயர்களாய்' மாறி லட்சங்களுக்குத் தன்னை விற்றுவிடத் தயங்காத பின்னடைவு அல்லது பெண்பார்க்கும் போதே நல்ல 'பசை'யுள்ள புளியங்கொம்பாகப் பார்த்துப் பிடித்துக்கொள்ளும் சாமர்த்தியம்(?!)
இன்னொருபுறம் திருமணத்தின் பின்னர் 'பிறருக்கு அழகுகாட்ட' என்று ஏற்கெனவே அவள் போட்டிருந்த ஃபர்தாவைக் கழற்றிவிட்டு வெறுமனே ஒப்புக்கு ஷால் போடுமாறு நிர்ப்பந்திக்கும் 'வீரம்?!' கூட ஆங்காங்கே வெளிப்படத்தான் செய்கிறது. இப்படி இப்படி எத்தனை! எதைச் சொல்ல? எதை விட?
தமக்கு சீதனம் சேர்க்கவும், நிர்க்கதியான நிலையிலிருக்கும் தமது குடும்பத்தைப் பராமரிக்கவும் என்று எத்தனை ஆயிரம் முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கில் பணிப்பெண்களாய் முதுகுமுறிய வேலை பார்க்கிறார்கள்?
மஹ்ரம் துணையின்றி வேலை வாய்ப்புக்காக தனியே வெளிநாடு போவது ஹராம் என்று 'ஃபத்வா' கொடுக்கும் நமது மார்க்க மேதைகள் இந்த விஷச் சக்கரத்திலிருந்து பெண்களும் நம் சமூகமும் மீள்வதற்கான தயாரிப்புகளைச் செய்துகொடுப்பது பற்றி சமூகத்தைத் தட்டியெழுப்பவோ, அந்நிய கலாசாரத்தால் சீர்கெட்டுப் போயுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பவோ என்ன தயாரிப்புகளைச் செய்துள்ளார்கள்?
இஸ்லாம் வாழும் மார்க்கம். வாழ்வு முழுமையும் வணக்கம் என்று கற்றுத் தந்துள்ள உன்னத மார்க்கம். எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு தந்துள்ள நடைமுறை மார்க்கம். அப்படியிருக்க யதார்த்தநிலை எவ்வளவு நேர்மாறாக இருக்கிறது?]]
ஒருகாலத்தில் மற்ற சமயத்தவர் மத்தியில் பெண்ணுக்கு ஆன்மா உண்டா இல்லையா என்ற பட்டிமன்றம் ஒருபுறம், பெண் என்பவள் இழிபிறப்பு என்றும் தீண்டத்தகாதவள், துரதிருஷ்டம் பிடித்தவள் என்றும் தள்ளிவைத்து எள்ளி நகையாடும் அவலநிலை மறுபுறம் என்று உலகத்தில் பெண்ணினம் சீரழிந்துகொண்டிருந்தது. பெண்ணைப் போகப் பொருளாய், விற்பனைப் பொருளாய் பார்த்த, பிறந்த உடனேயே குழிதோண்டிப் புதைத்த ஒரு காலம் இருந்ததை நாம் அறிவோம். அல்லாஹ் தஆலா கூறுகிறான்:
''அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்''. (திருக்குர்ஆன்: 16:58) இந்நிலையில்தான் இஸ்லாம் என்ற உன்னத மார்க்கம் பெண்ணுக்கு உயிரோடு உணர்வும், அறிவோடு ஆன்மாவும் உண்டு என்பதை உலகுக்கே உரத்துச் சொன்னது. தாய்மையை மேன்மைப்படுத்தியது. பெண்ணுக்கும் உரிமைகள் உண்டென்பதை, சொத்துரிமை முதல் திருமணத்தில் பெண்ணின் விருப்பத்துக்கு மதிப்பளிப்பது வரை பெண்ணை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது.
ஃபர்தா என்ற உன்னத வரையறையை வழங்கி அவளைக் கண்ணியப்படுத்தியது. மஹர் எனும் உரிமையை வழங்கி அவளின் எதிர்காலத்துக்கு உத்தரவாதமளித்தது.
பெண்பிள்ளைகளைப் பெற்று நல்ல முறையில் வளர்த்து உரியமுறையில் திருமணமுடித்துக் கொடுக்கும் தந்தைக்கு சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டது.
மனைவி என்ற நிலையில், 'உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியருக்குச் சிறந்தவர்களே!' என்று அவளுக்கு உயர்வளித்தது.
தாய் என்ற நிலையில், 'உறவுகளில் முதன்மையாய் நேசிக்கப்படத் தகுதியான முதல் மூன்று இடங்களையும்' தாய்க்கே வழங்கியது.
இப்படி எத்தனை எத்தனை உன்னதங்களை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது!
எல்லாம் சரிதான்! ஆனால்....
இன்றைய நமது சமுதாயத்தின் யதார்த்தம் என்ன?
இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள இந்த உன்னதங்களையெல்லாம் குறைவே இன்றி நமது சமுதாயம் பெண்ணுக்கு உள்ளபடி வழங்கியுள்ளதா?
அவள் கண்ணியத்துக்குரியவளாய் மதிக்கப்படுகிறாளா?
பெண்பிள்ளை பிறந்துவிட்டால், 'ஐயோ! இவளை எப்படிக் கரைசேர்ப்பேன்?' என்று பெற்றோர் கவலையோடு திகைத்துப்போகும் நிலை இன்று இல்லவே இல்லையா?
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (திருக்குர்ஆன்: 4:4)
என்றுதான் அல்குர்ஆன் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் எமது சமூகத்தில் இஸ்லாம் சொல்லாத சீதனம் என்ற அனாச்சாரம் தலைவிரித்து ஆடவில்லையா? இலங்கையில் ஒரு குறித்த பிரதேசத்தில் இன்றுவரை முஸ்லிம்கள் மத்தியில் ஒவ்வொரு பெண்குழந்தைக்கும் தனித்தனி வீடுகட்டி, அதற்குரிய பொருட்களையெல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. மாப்பிள்ளையின் தகுதிக்கு ஏற்றபடி (இன்ஜினியர், டொக்டர், லோயர் என்ற ஒவ்வொரு தரத்துக்கும் ஒவ்வொரு ரேஞ்சில் ரேட் நிர்ணயிக்கப்படுகிறது) கார், கொழும்பில் வீடு என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். வேறு பகுதிகளில் இரகசியமாக ரொக்கம் வாங்கி அதில் ஓர் அற்பத் தொகையை 'மஹர்' என்று ஒப்புக்குக் கொடுக்கும் அவலம் இன்னுமே முற்றாக முடிவுக்கு வரவில்லை. இஸ்லாத்திற்கு எதிரான சீதனத்தைக் கொடுத்து மாப்பிள்ளையை 'விலைகொடுத்து வாங்க' மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்கும் பெண்கள் பலர் முதிர்கன்னிகளாய் வீட்டுக்குள் வலம்வரும் நிலை. சீதனம் ஹராம் என்று தெரிந்தும் பெண்ணுக்கு இன்னும் வயதேறினால் அறவே திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்ற அச்சத்தில் எப்படியோ மாப்பிள்ளை வீட்டார் கேட்பதைக் கொடுத்து பெண்ணை 'வாழவைத்து'விடும் பலர். மார்க்கத்தைக் கற்ற நமது இளைஞர்களில் அனேகர் திருமண விடயத்தில் மட்டும் 'உம்மாவுக்காக!' என்று 'தாய் சொல் தட்டாத தனயர்களாய்' மாறி லட்சங்களுக்குத் தன்னை விற்றுவிடத் தயங்காத பின்னடைவு அல்லது பெண்பார்க்கும் போதே நல்ல 'பசை'யுள்ள புளியங்கொம்பாகப் பார்த்துப் பிடித்துக்கொள்ளும் சாமர்த்தியம் (!?!). இன்னொருபுறம் திருமணத்தின் பின்னர் 'பிறருக்கு அழகுகாட்ட' என்று ஏற்கெனவே அவள் போட்டிருந்த ஃபர்தாவைக் கழற்றிவிட்டு வெறுமனே ஒப்புக்கு ஷால் போடுமாறு நிர்ப்பந்திக்கும் 'வீரம்?!' கூட ஆங்காங்கே வெளிப்படத்தான் செய்கிறது. இப்படி இப்படி எத்தனை! எதைச் சொல்ல? எதை விட?
பெண்கள் நான்கு காரணங்களுக்காகத் திருமணமுடிக்கப்படுகின்றனர் என்று கூறிய இஸ்லாம், இறுதியில் 'மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே தெரிவுசெய்யுங்கள்' என்று கூறியிருப்பதை எத்தனை பேர் பொருட்டாகக் கருதுகின்றார்கள்? மார்க்கம் கற்றவர்கள்கூட வெள்ளைத் தோலை வலைபோட்டுத் தேடும் நிலை இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்லிவிடத்தான் முடியுமா என்ன?
கணவன் மரணித்தபின் விதவையான பெண்களுக்கோ திருமண வாழ்வில் தோல்வியுற்று நிற்கும் பெண்களுக்கோ மறுவாழ்வு கொடுக்கும் துணிவு நமது இளைஞர்களில் எத்தனை பேருக்கு வந்துள்ளது? அப்படியே தமக்கிருக்கும் உரிமையைப் பயன்படுத்தி இரண்டாம் திருமணம் முடிப்போர்கூட இருபதுக்குள் இளம் கன்னியையே தேடி மணக்கும் நிலைதானே பெரும்பாலும் நடைமுறையில் இருக்கிறது?
மஹர் என்பதன் தாத்பரியத்தை உணராமல் ஐநூறோ ஆயிரமோ ஒப்புக்குக் கொடுக்கும் நிலையில், தன் கணவனை இழந்த அல்லது விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணின் எதிர்காலத்துக்கான உத்தரவாதம் சமூகத்தால் வழங்கப்பட்டுள்ளதா?
அல்லாஹ் கூறுகிறான்: ''இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.'' (திருக்குர் ஆன்: 2:41)
''(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்;. பாலூட்டும் தாய்மாகளுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்;. எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.'' (திருக்குர் ஆன்: 2:233.)
பெண்ணை தலாக் சொன்னபின் அவளையோ குழந்தைகளையோ ஏறிட்டும் பாராமல் கைவிட்டுப் போகும் ஆண்கள் எமது சமூகத்தில் எத்தனை பேர் உள்ளனர்? நமது ஆலிம்களில் எத்தனை பேர் தமது ஜும்ஆப் பிரசங்கங்களில் இவற்றைப் பற்றியெல்லாம் எடுத்துச்சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றார்கள்? பொறுப்பிலிருந்து நழுவிச் செல்லும் ஆண்களைத் தண்டித்தோ கண்டித்தோ பெண்ணுக்கு நியாயம் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைதான் எமது சமூகத்தில் காணப்படுகின்றதா?
தமக்கு சீதனம் சேர்க்கவும், நிர்க்கதியான நிலையிலிருக்கும் தமது குடும்பத்தைப் பராமரிக்கவும் என்று எத்தனை ஆயிரம் முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கில் பணிப்பெண்களாய் முதுகுமுறிய வேலைபார்க்கிறார்கள்?
மஹ்ரம் துணையின்றி வேலை வாய்ப்புக்காக தனியே வெளிநாடு போவது ஹராம் என்று 'ஃபத்வா' கொடுக்கும் நமது மார்க்கமேதைகள் இந்த விஷச் சக்கரத்திலிருந்து பெண்களும் நம் சமூகமும் மீள்வதற்கான தயாரிப்புகளைச் செய்துகொடுப்பது பற்றி சமூகத்தைத் தட்டியெழுப்பவோ, அந்நிய கலாசாரத்தால் சீர்கெட்டுப் போயுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பவோ என்ன தயாரிப்புகளைச் செய்துள்ளார்கள்?
நமது இஸ்லாமிய இயக்கங்கள் இந்த அவலங்களை ஒழித்து சமூகத்தின் கண்களாய் உள்ள பெண்களின் கண்ணீர் துடைக்க என்னென்ன தீர்வுத் திட்டங்களை முன்வைத்து நடைமுறைப்படுத்தி வருகின்றன?
இஸ்லாம் வாழும் மார்க்கம். வாழ்வு முழுமையும் வணக்கம் என்று கற்றுத் தந்துள்ள உன்னத மார்க்கம். எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு தந்துள்ள நடைமுறை மார்க்கம். அப்படியிருக்க யதார்த்தநிலை எவ்வளவு நேர்மாறாக இருக்கிறது?
இன்னொருபுறம், திருமணத்தின் பின் சதா வேலை...வேலை என்ற அவதிப்படும் தமது மனைவியருக்கு ஓய்வு நேரத்திலாவது சற்று ஒத்தாசை செய்துகொடுக்கும் ஆண்கள் எத்தனை பேர்? விடுமுறை நாளில் சமையலுக்கு ஓய்வுகொடுத்துவிட்டு வெளியில் போய் சாப்பிட்டு வரலாம் என்றோ வெளியில் இருந்து சாப்பாடு தருவிக்கலாம் என்றோ ஆதரவாய்க் கூறும் ஆண்கள் எத்தனைபேர்? அவள் செய்யும் பணிகளில் நல்லவற்றை நாலு வார்த்தையில் பாராட்டி, அவளுக்கு நன்றி தெரிவிக்கும் இங்கிதம் எத்தனை பேரிடம் உள்ளது?
மாதவிடாய்க் காலங்களிலும் தாய்மையுற்றுக் கருவைச் சுமந்திருக்கும் நிலையிலும் பெண்கள் உளவியல் ரீதியாக சஞ்சலமுற்ற நிலையில் காணப்படுவர் என்பதை உளவியலும் மருத்துவமும் சொல்லியுள்ள நிலையில் எத்தனைபேர் அவளுடன் இதமாக, ஆதரவாக, ஆறுதலளிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்கள்? கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்றதுக்குப் பரவாயில்லை, தொடர்ந்து படி என்றோ உன் ஆற்றல்களை சமூக மேம்பாட்டுக்காய்ப் பயன்படுத்து என்றோ ஊக்கமளிக்கும் ஆண்கள் எத்தனைபேர்?
கண்ணியத்துக்குரிய என் அன்புச் சகோதரர்களே!
கற்பூரம் சுமக்கும் கழுதைகள் போல உன்னத மார்க்கமொன்றை, இறையோனின் மாபெரும் ஒளிவிளக்கைச் சுமந்திருந்தும் போகும் வழிதெரியாமல் இருட்டுக்குள் குருட்டுத் தவம் செய்து கொண்டிருக்கும் நமது சமுதாயத்தின் அவலநிலையையும், பெண்களின் முடிவலித் துயரங்களையும் கண்டும்கேட்டும் மனம் வெதும்பிப் போன நிலையில் எழுந்த கேள்விகள் இவை. இஸ்லாத்தில் பெண்ணுக்கு 'எல்லாம்' இருக்கின்றதுதான். எனவே, புதிதாக நமக்கு யாரும் உரிமை பெற்றுத்தரத்தேவையில்லை. அல்லாஹ் ஏற்கெனவே தந்திருக்கிறான் நிரப்பமாக! ஆனால், அவை நமது பெண்களுக்குத்தான் இன்னும் வந்து சேரவில்லை. இஸ்லாத்தில் இருக்கிறது. முஸ்லிம் சமூகத்திடம் நடைமுறையில் இல்லை. இனியேனும் இந்நிலை மாறுமா? பெண்களின் அவலம் தீருமா? சகோதரர்களே பதில்கூறுங்கள்!
ஜஸாக்கல்லாஹு கைரன்!
News: லறீனா அப்துல் ஹக்
Wednesday, June 1, 2011
காதல் என்றால் என்ன....? எது உண்மையான காதல்...?

உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.
இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.
முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே! ]
காதல் என்றால் என்ன?
எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்!’ - இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். `காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்!
காதல் செய்யும் மனிதர்களில் சுமார் பத்து சதவீதம் பேர்கூட திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை! சுமார் 60 சதவீத காதல், திருமணம் என்ற பேச்சினை எட்டும் முன்னரே கலைந்து போய் விடுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இருவருமே முதன்முறையாக காதலில் விழும்போது அவசரபட்டு விடுவதுதான். பின்னர் இது காதல் இல்லை. நம் வாழ்க்கைக்கு இது சரிபடாது என்று பிரிந்து விடுகின்றனர்.
பருவ மாற்றம் காரணமாக இரண்டுங்கெட்டான் பருவத்தில் எதிர்பாலினத்தவரை பார்த்ததும் ஈர்ப்பு உண்டாகிறது. அதை காதல் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். அது வெறும் இனக்கவர்ச்சி. ஆகவே திருமணத்திற்குப்பின் கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஈர்ப்புத்தான் உண்மையான காதல் என்று தாளாரமாகச் சொல்லலாம்.
காமம் என்பதில் காதல் இருக்க வேண்டிய அவசியமில்லை. காமம் என்பது காதல் ஆகாது. ஆனால் காதலில் காமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. அது ஒரு சிலருக்கு பெரும்பகுதியாகவும், சிலருக்கு முழு பகுதியாகவும் அமையலாம். திருமணத்திற்குமுன் ஏற்படும் காதல் பெரும்பாலும் காமத்தை நோக்கியே நகரும். இல்லையென்று சிலர் மறுத்தாலும் உண்மை அதுதான் என்பது எதார்த்தம்.
ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றவதாக (அவர்களைக்கெடுப்பதற்காக) ஷைத்தான் அங்கு நிச்சயம் இருப்பான் என்னும் இஸ்லாமிய கண்ணோட்டம் மிகவும் சரியானதே என்பதை விஞ்ஞான ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.
ஒரு ஆணும் பெண்ணும் பேசும்போது அவர்களுக்குள்ள இடைவெளியைப்பொருத்து அவர்கள் கெடுவதற்குள்ள வாய்ப்பைப்பற்றி குறிப்பிடும்போது, ஒரு அடி இடைவெளிக்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நான்கு முறை அருகருகே நின்று பேசினால் கெடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்கிறார்கள்.
ஆகவே அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை போன்ற காதலே உன்னதமானது. இந்த உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!
திருமணத்துக்குமுன் காதலா...
கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தன்னுடன் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் தீவிர நட்புடன் பழகுவதுண்டு. இந்த நட்பில் நல்ல நம்பிக்கை இருக்கும். இதில் எல்லோருக்கும் காமம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரிடையே மட்டும் இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அன்பு, நட்பு, அளவுகடந்த பாசம் போன்றவற்றிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலே எல்லாவற்றைம் காதல் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்.
குடும்பத்தை பற்றி அக்கறை இல்லாமல் சிலர், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதிர்கால வாழ்வு பற்றிய எவ்வித பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் உண்மையான காதலாக இருக்க முடியாது. ஆனால் வெளிலகிற்கு இவர்கள் தீவிர காதலர்கள் போல் தோன்றுவார்கள்.
பொழுதுபோக்கிற்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லூரி மற்றும் தாம் பணியாற்றும் இடங்களில் தன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்பதற்காக யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு காமம்தான் அடிப்படை. இவர்களுக்குள் ஓரளவுதான் நம்பிக்கை இருக்கும். ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பே இருக்காது. ஆனால் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றுவார்கள். பலர் முன்னிலையில் தீவிரமாக காதலிப்பது போல் நடிப்பார்கள். இதை தேறாத காதல் என்று கூறிவிடலாம்.
சினிமா நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள். இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை மூடத்தனமான காதல் என்றும் பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம். ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும், குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள். டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே காமம் மட்டுமே இருக்கும்.
இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும். காமத்திற்கும், காதலுக்கும் பெருமளவு தொடர்பில்லை. காமம்தான் காதல் என்று சிலர் சொல்வது அவர்களின் அறியாமையே. இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதே இயல்பான காதலின் ஆணிவேர். காதலில் விழுந்த பிறகு, ஒரு ஆணுக்கு, தாம் நேசிக்கும் பெண்தான் உலகிலேயே அழகியாகத் தெரிவாள். (அது உங்கள் மனைவியாக இருக்கட்டுமே) பிறரது விமர்சனங்களை பற்றி கண்டு கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். அதுபோலவே ஓர் ஆணின் புற அழகை பார்த்தே பெண்கள் காதலுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த அழகு அவர்களுக்கு பிடித்திருக்கும் அவ்வளவுதான். இவையத்தனையும் போலியான காதல்.
உண்மையான காதல்
உண்மையான காதல் என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது, இருக்க வேண்டியது. உங்கள் உண்மையான காதலி உங்கள் மனையாகவே இருக்கட்டும். ஆகவே மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம்; ''உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!
அல்லாஹ்வே மிக அறிந்தவன்
Artist:Rasmy RasikTuesday, May 31, 2011
போதைவஸ்துப் பாவனையும் இலங்கை முஸ்லிம்களும்
சில கள ஆய்வுக் குறிப்புகள்
இலங்கையில் 1979க்குப் பிறகு அறிமுகமான திறந்த போருளாதாரக் கொள் கையின் விளைவாக கொழும்பின் நகர வாழ்க்கை வேகமாக மாறி வருகின் றது. அதீத நகரமயமாக்கப்பட்ட சமூக அமைப்பில் போதைவஸ்துப் பாவனை பெரியளவிலான நெருக்கடிகளை உருவாக்குகின்றது. இலங்கையின் மொத்த சிறைக்கைதிகளில் 40%க்கும் அதிகமானோர் போதைவஸ்துக்களுடன் தொடர் பானவர்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் பொதுவாக இலங்கையிலும் குறிப்பாக கொழும்பிலும் போதைவஸ்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 15 வகையான பிரபல்யமான போதைவஸ்துக்கள் பாவனையில் உள்ளபோதும் இலங்கையில் குறிப்பாக கொழும்பு இளைஞர்களிடையே ஹெரோயின் முதலிடத்தில் உள்ளது.ஹெரோயின் போதைவஸ்திலும் பல்வேறு தரங்கள் உள்ளன. மூன்றாம் தர ஹெரோயினே கொழும்பு இளைஞர்களால் பெரிதும் பாவிக்கப்படுகின்றது. பொலிஸ் போதை தடுப்புப் பணியகம் (Police Narcotic Bureau) வின் முன்னாள் பணிப்பாளர் பூஜித ஜயசுந்தர கொழும்பு இளைஞர்களுக்கு போதைப்பொருள் எங்கிருந்து வருகின்றது என்ற கேள்விக்கு பின்வருமாறு பதில் தந்தார்.
சினிமா பார்ப்பது தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு என்ன?

சினிமா, நாடகங்கள் இவை போன்றவைகளை பார்ப்பது தொடர் பான இஸ் லாமிய நிலைப்பாடு என்ன என்பதை பலர் கேட்டுக் கொண் டிருக்கின்றனர். இவற்றை ஒரு முஸ்லிம் பார்க்கச் செல்வது கூடுமா?அல்லது ஹராமாகுமா என்றும் கேட்கின் றனர்.
எவ்வித சந்தேகமுமின்றி சினி மாவும் அதனைப்போன்ற ஊட கங்களும் ஏனைய பொருட்களைப் போன்றே அதன் பயன் பாட்டைப் பொருத்து ஹராமா அல்லது ஹலாலா என தீர்மா னிக்கப்படுகின்றது. அதனை நன் மையான வழியில் பயன்படுத்தினால் அடிப்படையில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. அதற்கான தீர்ப்பு ஏனைய விடயங்களைப் போன்றே அமையும். ஆனால், அதனை தீய வழியில் பயன்படுத்தினால் அது ஹராமானதாக அமைந்து விடும்
இணையத்தளம் மூலம் ஆணும் பெண்ணும் உரையாடலாமா?

ஆணும் பெண்ணும் இன்டர்நெட் மூலமாக வரையறைகளைப் பேணி உரை யாடலாமா? (CHAT)
அல்லாஹுத்தஆலா ஷைத்தானின் சுவடுகளை பின்பற்றுவதை தடை செய்துள்ளான் என்பதை நாம் அறிந்ததே. ஹராத்தில் விழக் கூடிய, ஹராத் திற்கு இட்டுச் செல்லக்கூடிய அனைத்தும் தடுக் கப்பட்டுள்ளது. சிலவேளை, அதன் அடிப்படை ஆகுமாக இருந்தாலும்கூட. இதனை உல மாக்கள் தீமை யைத் தடுப்பதற் கான அடிப்படை என கூறுகின்றனர்.
ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி உயிர் வாழும் ஓர் அறிவுப் பாரம்பரியம்
கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி இந்நூற்றாண்டின் மிகப்பெரும் இஸ்லாமிய சிந்தனையாளர். இஸ்லாமிய தஃவா களத்தில் முன்னணியில் நிற்கும் தன்னிகரற்ற ஆளுமை.
தான் வாழும் சமூகம் குறித்து ஆழ்ந்த அனுபவமும் கூர்ந்த பார்வையும் மிகுந்தவர். இஸ்லாமிய சட்டத்துறையில் அதன் அடியா ழம் வரை சென்று சமகாலத் தேவைகளுக் கேற்ப சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர். எதையும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை (அஸாலா) வழிநின்று அதேவேளை சமகாலத்தின் செல்நெறிகளை (முஆஸிரா) கருத்திற் கொண்டு நோக்குபவர். இதனால் சட்டப் பகுதியில் முஜ்தஹிதுல் முத்லக் என்ற அந்தஸ்தை எட்டியவர்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக பேனை முனையில் போராடி வரும் கர்ளாவி, நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவரது பேச்சும் பிரச்சார மும் எழுத்தும் அரபுலகோடு சுருங்கவில்லை. தமது அடையாள நெருக் கடிக்கு(Identity Crisis) முகங்கொடுத்து, இஸ்லாமிய பண்பாட்டை பேணுவதில் போராடிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய, அமெரிக்க முஸ்லிம்களை நோக்கி யும் அவரது சிந்தனைகள் நீண்டன.
இஸ்லாம் எல்லா காலத்திற்கு முரிய தெய்வீகத் தூது. அது ஒரு வாழும் கொள்கை, நடைமுறைச் சாத்தியமான வாழ்க்கைத் திட்டம். கால, வர்த்தமான, தேசிய எல்லைகளைத் தாண்டி எப்போதும் இளமையாய் வாழும் சிந்தனை. இதுதான் கர்ளாவியின் ஒட்டு மொத்த பிரச்சாரத்தினதும் அடி நாதம்.
அல்-அஸ்ஹரின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் இணைந்து தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த கர்ளாவி கல்வி அடைவுகளில் எப்போதும் முன்னணி யிலேயே நின்றார். உயர்தரப் பரீட்சையில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். பின்னர் அல்-அஸ்ஹர் உஸூலுத்தீன் பீடத்தில் சேர்ந்து 1953ல் 180 பட்டதாரி மாணவர் களுள் முதல் தரத்தில் சித்தியடைந்தார்.
1957ல் மொழித்துறை மற்றும் இலக்கியத்துக்கான உயர் கல்வி நிறுவனத்தின் டிப்ளோமா பட்டம் பெற்றார். 1960ல் உஸூலுத்தீன் பீடத்தில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் துறைகளில் முதுகலைக் குச் சமனான உயர்கல்விச் சான் றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. இறுதியாக 1973ல் "ஸகாத்தும் சமூகப் பிரச்சினை யைத் தீர்ப் பதில் அதன் பங்கும்" என்ற தலைப்பில் தனது கலாநிதிக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தார்.
யூஸுப் அல் கர்ளாவி பள்ளி வாசல் ஒன்றின் கதீபாக சிறிது காலம் பணி யாற்றிய பின்னர் எகிப்திய வக்ப் அமைச்சின் கீழுள்ள இமாம்களுக் கான கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக செயலாற்றினார். அதனைத் தொடர்ந்து அல்-அஸ்ஹரின் வெளியீட்டு முயற்சிகளை மேற்பார்வை செய்யும் தஃவா செயல கத்தில் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1961ல் கட்டார் மார்க்கக் கல்வி நிறுவனத்தின் தலைவரானார். 1973 வரை அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் அயராது உழைத்தார். 1973ல் கட்டார் பல்கலைக்கழகத்தில் ஷரீ ஆத் துறையை நிறுவி அதனை வளர்த்தெடுக்கும் பொறுப்பையும் ஏற்றார். 1981 முதல் 1999 வரை அதன் முதல்வராகப் பணியாற்றினார்.
கட்டார் பல்கலைக்கழகத்தில் 1999ல் சுன்னா மற்றும் ஸீறா ஆய்வு நிலை யத்தை நிறுவி இன்று வரை அதன் பணிப்பாளராக உழைத்து வருகின்றார். கலாநிதி கர்ளாவி இஸ்லாமிய கல்விக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். பிரச்சாரப் பணிக்காக நவீனகால தஃவா உத்திகளையும் சாதனங்களையும் நன்கு கையாண்டு தனது பேச்சாலும் எழுத்தாலும் அரை நூற் றாண்டுக்கு மேல் போராடி வருவர். தற்போது ஐரோப்பிய சிறுபான்மை முஸ்லிம்களின் சிந்தனை ஒருமைப்பாட்டையும் இஸ்லாமிய அடையாளத் தையும் நோக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆய்வுக்கும் பத்வாவுக் குமான ஐரோப்பிய சபையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
மக்காவிலுள்ள றாபிததுல் ஆலமில் இஸ்லாமியின் கீழ் இயங்கும் சட்டமன் றத்திலும் (மஜ்மஉல் பிக்ஹி) ஜோர்தானிலுள்ள இஸ்லாமிய நாகரிகத்துக் கும் ஆய்வுக்குமான மன்றத்திலும் இஸ்லாமிய உலகில் பல்வேறு பிக்ஹ் துறை ஆய்வு நிலையங்களிலும் தஃவா இயக்கங்களிலும் அங்கம் வகித்து வருகின் றார். இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் மட்டுமன்றி சமூக நலன் புரிப் பணிகள், இலக்கிய ஆய்வுகள் என கலாநிதி கர்ளாவியின் பங்கு விரிந்து செல்கின்றது. Oxford இலுள்ள இஸ்லாமிய ஆய்வு நிலையத்திலும் இஸ்லா மாபாத் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக செயற்குழுவிலும் அவர் அங் கம் வகிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது முஸ்லிம் அறிஞர் களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவராகப் (JUMS) பணியாற்றுகின்றார்.
16 வயது முதலே தனது கிராமத்தை மையமாக வைத்து பல்வேறு மார்க்கப் பிரச்சார உரைகளை தொடர்ச்சியாக நிகழ்த்தி வந்தார். 19வது வயதில் இஃவா னுல் முஸ்லிமூன் இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். இமாம் ஹஸனுல் பன்னாவின் ஆன்மீகப் பாசறையில் வளர்ந்த நவீனகால இஸ்லாமிய அறிஞர்களில் கலாநிதி கர்ளாவியும் ஒருவர். இஹ்வான்களின் இரண்டாவது பொது வழி காட்டியாக இருந்த இமாம் ஹஸன் ஹுழைபியின் பணிப்பின் பேரில் எகிப்தின் அலெக் ஸாந்திரியா முதல் உஸ்வான், சினாய்ப் பாலைவரை அவர் தஃவா பயணங்களில் ஈடுபட்டார். இதனால் சிரியா, ஜோர் தான், லெபனான் போன்ற நாடுகளிலும் கர்ளாவியின் கருத்துக்களும் சிந்தனை களும் பெரும் செல்வாக்கைப் பெறலானது. இதனால் அவர் அறபு ஆட்சியா ளர்களின் கொடுமைகளுக்கு ஆளாகியதோடு பலமுறை இருண்ட சிறைகளி லும் தள்ளப்பட்டார். 1941, 1954, 1967, 1973 போன்ற ஆண்டுகள் அவரது வாழ்வில் மிகவும் துயரம் மிகுந்தவை. இந்த ஆண்டுகளில் அவர் பல மாதங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழிக்க வேண்டியிருந்தது.
மஸ்ஜித்களின் குத்பா மிம்பர்களை மட்டுமன்றி நவீன வெகுசன தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக அவர் பயன்படுத்துகின்றார். மாநாடுகள், கருத்தரங்குகள், விரிவுரைகள், ஐரோப்பிய நாடுகளில் நடாத் தப்படும் விஷேட கலந்துரையாடல்கள், பல்கலைக்கழகங்கள், என கர்ளாவி யின் தஃவாக் களம் விரிந்த எல்லை கொண்டது.
அஷ்ஷெய்க் அல்லாமா கர்ளாவியின் தஃவா உத்திகள் முற்றிலும் நவீன தஃவா முறையியலைத் தழுவியதொன்றாகும். சமகாலத்தில் தஃவாவின் அடிப்படைகள் தஃவா முறையியல் (பிக்ஹுத் தஃவா) என்னும் தனிப்பெரும் கலையாக வளர்ச்சி கண்டுள்ளது. இத்தகைய பிக்ஹுத் தஃவாவை செம்மை யான ஒரு தனிக் கலையாக வளர்த் தெடுத்ததில் கர்ளாவியின் சிந்தனைக் கும் கருத்துகளுக்கும் ஒரு காத்திரமான பங்கிருக்கின்றது என்பதை இலகு வில் புறக்கணிக்க முடியாது.
அழைப்பாளனின் அறிவுப் பின்னணி, கோளாறு எங்கே? இஸ்லாமி இயக்கங்கள் முதன் மைப்படுத்த வேண்டியவை போன்ற நூல்கள் நவீன இஸ்லாமிய இயக்கங்களையும் இஸ்லாமிய எழுச்சியையும் வழிநடாத்து வதில் எழுதப் பட்ட முக்கிய நூல்கள் எனலாம். கர்ளாவியின் உணர்ச்சிபூர்வமான உரைகள் உறங்கும் உள்ளங்களை உலுப்பி விடும் தன்மை வாய்ந்தவை. அவரது மிம்பர் பிரசங்கம் கேட்பவர்களின் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. தீவிரவாதத்தை நிராகரிக்கும் இவர் எப்போதும் நடுநிலையான போக்கைக் கொண்டவர்.
கர்ளாவி 100க்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார் இவரது நூல்கள் இஸ்லாமிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அவற்றுள் சில பத் துக்கு மேற்பட்ட தடவைகள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. கணிசமானவை ஆங்கிலம்,பிரெஞ்சு, உருது, போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. கலாநிதி கர்ளாவி ஆயிரக்கணக் கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள தோடு விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார். இஸ்லாமிய உலகில் இவர் ஓர் அரிய எழுத்தாளர். இவரைப் போன்று எழுதியவர்கள் மிகவும் சொற்பமானவர் களே.
சமகாலத்தின் தேவைகளுக் கும் ஷரீஆவின் நெகிழ்வுகளுக்கு மிடையில் ஒர் அற்புதமான சமநிலையை அவர் பேணியுள்ளார். எந்த கருத்தாழ மிக்க சிந்தனையையும் எளிய மொழிநடையில் முன்வைப்பது இவரது எழுத்தின் சிறப்பம்சம் எனலாம். ஒரு அழைப்பாளனின் உத்வேகமும் சட்ட அறிஞரின் நுணுக்கமும் சீர்திருத்தவாதியின் விரிந்த பார்வையும் இவர் எழுத்துக்களில் சம விகிதத்தில் இழையோடுவதைக் காணலாம்.
பொருளாதாரம், அரசியல், சட்டம், சமூகம், அகீதா, வரலாறு, தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹுத் தஃவா, கல்வி, இலக்கியம் என
எல்லாத் துறைகளிலும் பல்வேறு நூல்களை அவர் எழுதிப் பெரும் வரவேற் பைப் பெற்றுள்ளார். சில பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடப் புத்தகங்களாக கற்பிக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது.
கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி உஸூலுத்தீன் துறையைச் சார்ந்த அகீதா, தப்ஸீர் ஆகிய பகுதிகளி லேயே தனது கல்வியைப் பூர்த்தி செய்தவர். இத் துறையில் கல்வி கற்ற அவரால் எவ்வாறு மிகப் பெரும் சட்ட மேதை யொன்றாக மாற முடிந்தது. இதுவொரு சுவாரஸ்யமான விடயம். உண்மை யில் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி பள்ளிவாயலில் கதீபாகப் பணியாற்றிய காலத்திலும் தாயியாகப் பல்வேறு நகரங்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்த காலத்திலும் அவரிடம் பிக்ஹு சார்ந்த பிரச்சினைகளை முன் வைத்தே மக்கள் விளக்கம் கேட்டனர். தான் சென்ற இடங்களிலெல்லாம் மக்களிடமிருந்து வந்த சட்டப் பிரச்சினைகளே கர்ளாவியை மிகப் பெரும் சட்ட அறிஞராக மாற்றியது.
இவ்வகையில் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களைப் பற்றியும் மத்ஹப் களைப் பற்றியும் அவர் விரிவாக ஆராய்ந்ததன் விளைவாக ஒரு முஜ்தஹித் என்ற அறிஞனின் அளவிற்கு புலமைப் பெற்றார். சட்டத்துறையில் ஒரு வர் பெற முடியுமான கடைசி நிலை இதுவே.
கர்ளாவி எல்லா மத்ஹபுகளின் சட்டம் வகுக்கும் ஒழுங்குகளையும் ஆராய்ந் துள்ள போதும் அவர் ஒரு தனித்த, சுதந்திர சிந்தனையாளராகவே விளங்கு கின்றார். கர்ளாவி பிறந்த கிராமம் ஷாபி மத்ஹபை பின்பற்றும் பிரதேசம். இவர் மிக ஆழமாக கற்றது ஹனபி மத்ஹபின் சட்ட மரபுகளையே. எனினும் அவர் மத்ஹப்களிலேயே முற்று முழுதாகத் தங்கியிருக்கும் குறுகிய சிந்த னைக்கு அப்பால் பிக்ஹை காலத்தின் தேவைக்கேற்ப முன் வைக்கும் அபார திறமையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறார்.
இஜ்திஹாத் பணியைப் பொறுத்தவரை மத்ஹப் மரபுகளிலிருந்து விலகி சுதந்திரமாக குர்ஆனையும் சுன்னாவையும் ஆராய்கின்ற அதேவேளை மத்ஹ பிலிருந்து காலத்திற்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கும் போக்கை யும் அவர் பின்பற்றுகின்றார். சமகால, சமூக-அரசியல், பொருளாதார மாற்றங் களால் நேர்ந்த பிரச்சினைகளை மிக ஆழமாக உள்வாங்கிக் கொண்டு அதற் கான தீர்வுகளை இஸ்லாதின் மூலாதாரமான குர்ஆனிலும் சுன்னாவிலும் தேட முயல்வதுதான் இவரது இஜ்தி ஹாதின் சிறப்பம்சமாகும்.
கர்ளாவியைப் பொறுத்தவரை ஒவ்வொரு சட்ட அறிஞனும் தனித்து இயங் காமல் கூட்டு இஜ்திஹாத் மேற்கொள்வது மிகப் பயனுள்ளதாகவும் பொருத் தமானதாகவும் இருக்கும் எனக் கருதுகின்றார். இத்துறையில் அவர் எழுதிய ‘அல் இஜ்திஹாத் பீ ஷரீஆ இஸ்லாமிய்யா’ என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒரு முயற்சி எனலாம். கர்ளாவியின் இஜ்திஹாத் அடிப்படையைப் பற்றி விரி வாக ஆராயலாம். இங்கு இவ்விடயம் சுருக்கமாகவே தரப்பட்டுள்ளது என்ப தைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தை ஒரு பாடத்திட்டமாக கற்கும் எந்த ஒரு மாணவனுக்கும் கர்ளாவி என்பவரை தெரியாமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு அவரது சிந்தனை வீச்சும் பார்வைப் பரப்பும் மிக விரிந்தவை. இத்தகைய மகத்தான மனிதர்களின் ஆயுளை அல்லாஹ் இன்னும் பல்லாண்டு நீடித்து வைக்க நாம் பிரார்த்திப்போமாக.
றவூப் ஸெய்ன்
Subscribe to:
Posts (Atom)











