Thursday, December 15, 2011
Tuesday, December 6, 2011
இலங்கையில் தலைவிரித்தாடும் கப்று வணக்கம்
இலங்கையில் 8ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15ஆம் நூற்றாண்டு வரை முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான அறிஞர்களை தம்மகத்தே கொண்டிருந்தனர். பல உலமாக்களும் மார்க்க அறிஞர்களும் அவர்களிடையே காணப்பட்டதுடன் தம்மால் இயன்றவரை மார்க்கத்தை எடுத்து நடப்பதிலும் இலங்கை முஸ்லிம்கள் தனித்துவம் பெற்றிருந்தனர். இஸ்லாத்தை ஆசிய நாடுகளிலிருந்து அழிக்கும் நோக்குடன் வந்த போர்த்துக்கீஸரும் அவர்களைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தரும் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட உலமாக்களையும் மார்க்க அறிஞர்களையும் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். இதன் விளைவாக அடுத்த தலைமுறையினர் குர்ஆனை கற்பதற்கான வாய்ப்புகள் குறைந்தன. இந்தியாவிலிருந்து உலமாக்களும் மார்க்க அறிஞர்கள் வருவது தடைசெய்யப்பட்டதுடன் இலங்கைக்குள்ளும் முஸ்லிம்களின் போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டன. இதனால் இஸ்லாமிய அறிவு மக்களிடையே மங்கிப்போகத் தொடங்கியது. Monday, December 5, 2011
Wednesday, November 2, 2011
அரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா
ஹஜ்ஜுப் பெருநாள் வருகின்றது. லங்கா முஸ்லிம் இணையத்தள வாசகர்கள் அத்தனை பேருக்கும் எனது ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும். மேலும் இனிய பெருநாளை சிறப்பாக கொண்டாட இறைவன் அருள் புரிவானாக! ஆமீன்.
இம்முறை ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா விடயத்தில் சில குழப்பங்கள் நிகழலாம். ஆடு மாடுகளை கொண்டு செல்வதிலும் அவற்றை அறுப்பதிலும் சில சிக்கல்கள் ஏற்படலாம். எனவே அது சம்பந்தமான சில அறிவுரைகளை கூறுவது நல்லது என நினைக்கிறேன். அவை சில காரணங்களால் இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் தரப்பட்டுள்ளது. அவற்றை வாசிப்பது மிகவும் பயனுள்ளதாகவும் பிரச்சினைகளை தவிர்க்கவும் இன்ஷா அல்லாஹ் உதவும். இனி அரபா நாள் நோன்பு ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் உழ்கிய்யா சம்பந்தமான சில விடயங்களைப் பார்ப்போம்.
Sunday, October 30, 2011
யூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்!
இஸ்ரேலின் உளவுப் பிரிவு மொசாத் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறது. அதற்கு என்னென்ன முயற்ச்சிகளை எடுக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது ஒரு பழைய நிகழ்ச்சி!
1970 வாக்கில் பாலஸ்தீனர்களின் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. இஸ்ரேலியர்கள் தாக்குபிடிக்க முடியுமா என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் நடந்த தாக்குதல் பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவே இஸ்ரேலியர்கள் எண்ணினர். இதை இப்படியே வளர விட்டால் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்ற நோக்கில் பாலஸ்தீனர்களின் முன்னேற்றத்துக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஒரு தடை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்க தொடங்கியது இஸ்ரேலிய அமைச்சரவை.
1970 வாக்கில் பாலஸ்தீனர்களின் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. இஸ்ரேலியர்கள் தாக்குபிடிக்க முடியுமா என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் நடந்த தாக்குதல் பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவே இஸ்ரேலியர்கள் எண்ணினர். இதை இப்படியே வளர விட்டால் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்ற நோக்கில் பாலஸ்தீனர்களின் முன்னேற்றத்துக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஒரு தடை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்க தொடங்கியது இஸ்ரேலிய அமைச்சரவை.
Saturday, October 29, 2011
பண்டிகைக்காலச் சலுகை அறிவிப்புகள்
வணிகத்தில், வணிகர்களின் மக்கள் ஈர்ப்புத் தூண்டில் ஒன்று உண்டு - ‘பண்டிகைக்காலச் சிறப்புச் சலுகை தள்ளுபடிகள்’. இன, மொழி பேதமின்றி உலகமெங்கும் இது பொது. தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகரிலே ஆடித் தள்ளுபடி, தீபாவளி விசேஷத் தள்ளுபடி, ரம்‘ஜா’ன் தள்ளுபடி என்று வஞ்சனையில்லாமல் ஏதாவது விசேஷம் அடிக்கடி வந்துவிடுகின்றது. Monday, October 24, 2011
முஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா?
இஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டு, இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்துவதற்காக - திருக்குர்ஆனில் வரும் ஒருசில வசனங்களைத் தங்கள் வாதத்தை நிறுவுவதற்காக தவறுதலாக பொருள் கற்பித்து இஸ்லாத்திற்கு எதிராக சிலர் செய்யும் அவதூறு பிரச்சாரங்களில் ஒன்று தான் இந்த - "இஸ்லாமியர்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லச்சொல்லி குர்ஆன் கட்டளையிடுவதாக" கூறப்படும் வாதம்.
Subscribe to:
Posts (Atom)




